உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்று 13 விமானங்கள் ரத்து

நேற்று 13 விமானங்கள் ரத்து

சென்னை:சென்னையில் இருந்து காலை 7:25 மணிக்கு கோல்கட்டா செல்லும் விமானம், காலை 7:45 மணி புவனேஷ்வர் விமானம்; காலை 9:20 மணி ஹைதராபாத் விமானம்; இரவு 8:45 மணி புனே விமானம் என, ஐந்து புறப்பாடு விமானங்கள், நிர்வாக காரணங்களுக்காக நேற்று ரத்து செய்யப்பட்டது.அதேபோல், ஹைதராபாத்தில் இருந்து காலை 8:40 மணிக்கு சென்னை வரும் விமானம், பெங்களூருவில் இருந்து காலை 9:00 மணி விமானம்; புவனேஷ்வரில் மதியம் 12:00 மணி விமானம்; கோல்கட்டாவில் இருந்து மதியம் 1:00 மணிக்கு சென்னை வரும் விமானம் என, நான்கு வருகை விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.நேற்று ஒரே நாளில், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் ஒன்பது விமான சேவை ரத்து செய்யப்பட்டது, பயணியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இண்டிகோ, ஏ.டி.ஆர்., விமானங்கள் ரத்துசென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து இரவு 11:10 மணிக்கு மங்களூரு செல்லும் விமானம், இரவு 11:30 மணிக்கு திருச்சி செல்லும் விமானம், மங்களூருவில் இருந்து இரவு 7:25 மணிக்கு சென்னை வரும் விமானம், திருச்சியில் இருந்து 8:50 மணிக்கு சென்னை வரும் விமானம் என, 4 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ