உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.30 லட்சம் மதிப்புள்ள 130 மொபைல் போன்கள் மீட்பு

ரூ.30 லட்சம் மதிப்புள்ள 130 மொபைல் போன்கள் மீட்பு

சென்னை: மத்திய தொலை தொடர்புத் துறை உதவியுடன், காணாமல் போன 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 130 மொபைல் போன்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து, தெற்கு ரயில்வே ஆர்.பி.எப்., - ஐ.ஜி., அருள்ஜோதி அளித்த பேட்டி: மத்திய தொலை தொடர்புத் துறையுடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்பு படை, காணாமல் போன மற்றும் திருடு போன, பயணியரின் மொபைல் போன்களை மீட்டு வருகிறது. திருடுபோன மொபைல் போன் எண் இருந்தால் போதும்; அதன் வாயிலாக மொபைல் போனை கண்டறிந்து விட முடியும். அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் அக்., 27 வரை, மொபைல் போன் தொடர்பாக, 460 புகார் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில், 230 மொபைல் போன்கள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தம், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 120 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், விலை உயர்ந்த இரண்டு ஐ போன்கள் உட்பட பல்வேறு வகை போன்கள் அடங்கும். சென்னையில் திருடு போன மொபைல் போன்கள் விற்கப்பட்டு, டில்லி, ராஜஸ்தான் மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி