மேலும் செய்திகள்
நடிகர் அஜித்துக்கு வலை வீசுகிறதா தமிழக பா.ஜ.,?
1 hour(s) ago
த.வெ.க., கூட்டத்தில் சிதறி கிடந்த காலணிகள், கட்சி துண்டு அகற்றம்
2 hour(s) ago | 1
சென்னை : போக்குவரத்துத் துறையில் பணி நியமனங்களுக்காக மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், 2,100க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி ஆஜரானார். இதையடுத்து நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் மேலும், 150 பேருக்கு 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் 1,500 பேருக்கு, சம்மன் அனுப்பப்பட்டு, 1,350 பேர் இதுவரை ஆஜராகியுள்ளனர். இதேபோல செந்தில் பாலாஜி தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இருவர் விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க, அமலாக்கத் துறைக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் அவகாசம் வழங்கினார்.
1 hour(s) ago
2 hour(s) ago | 1