உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் 14 ரயில்கள் ரத்து

தமிழகத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் 14 ரயில்கள் ரத்து

சேலம்: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும், 14 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: உத்தர பிரதேசத்தில் நடக்கும் ரயில்வே தண்டவாள பணியால், தமிழகத்தில் இருந்து டில்லி உட்பட வட மாநிலங்களுக்கு இயக்கப்படும், 14 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.* திருவனந்தபுரத்தில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ், வரும் ஜன., 27 முதல், பிப்., 5 வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது* திருவனந்தபுரம் - ஹர்ஜத் நிஜாமூதீன் வார எக்ஸ்பிரஸ், ஜன., 9 முதல் பிப்., 2 வரை* எர்ணாகுளம் - ஹர்ஜத் நிஜாமூதீன் வார எக்ஸ்பிரஸ், ஜன., 6 முதல், பிப்., 6 வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது* கோவை - ஹர்ஜத் நிஜாமூதீன் வார எக்ஸ்பிரஸ், ஜன., 21, 24, 28, 31ல் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது* மதுரை - சண்டிகர் வார ரயில், ஜன., 10 முதல், பிப்., 5 வரை* கன்னியாகுமரி - ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கத்ரா வார ரயில், ஜன., 12 முதல், பிப்., 5 வரை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது* நெல்லை - ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா வார ரயில், ஜன., 8 முதல், பிப்., 1 வரை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஜன 05, 2024 16:51

சூப்பர். இங்கேருந்தும் அங்கிருந்தும் வடக்ஸ்தான் நிறைய வந்து போறாங்க. இங்கேதான் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கு.


surendran111@yahoo.com
ஜன 05, 2024 14:20

இந்த ரயில் கான்செல்கல் மாற்றுவழியில் இய்யாக்க முடியாதா என்ன?


surendran111@yahoo.com
ஜன 05, 2024 14:09

இந்த ரயில் கான்செல்கல் மாற்றுவழியில் இய்யாக்க முடியாதா என்ன? . சரி நிற்கும் ரயில்களை சபரிமலை ஸ்பேஸி...


srikrishna
ஜன 05, 2024 11:33

இவ்வளவு நாள் கான்செல் பண்றது பார்த்ததே கிடையா.. ரொம்ப அதிகம்.... பிலைட்ஸ் சாதகமா pannugiragal


SANKAR
ஜன 05, 2024 11:56

this is due to ayothya specials


S SRINIVASAN
ஜன 05, 2024 09:01

pl tell us these trains again will start or we have to use vande Bharat to pay more and travel??


மதுரை வாசு
ஜன 05, 2024 10:20

அவ்வளவு தூரம்போக வந்தேபாரத் ரயில் கிடையாது. தண்டவாள பராமரிப்பு என்பது எப்போதும் நிகழும் நிகழ்வுதான்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ