மேலும் செய்திகள்
ரூ.1.15 கோடி கையாடல்: தம்பதிக்கு சிறை
09-May-2025
சென்னை:திண்டுக்கல் மாவட்டம் நெல்லுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் அக்னிஹாசன், 53; பாண்டித்துரை, 34. புலிய ராஜகாபட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 54. மூவரும் கஞ்சா வியாபாரிகள். கடந்த, 2023ல், திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள, சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக, 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர். அவர்களை திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, மதுரையில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், முதலாம் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கஞ்சா வியாபாரிகள் மூவருக்கும், தலா, 14 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
09-May-2025