வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மர்மநபர் ஒன்னு தலைப்பாகையுடன் இல்லாட்டி பாவாடையுடன். இரண்டுபேரும் துரோகிகள்
சிதம்பரம்: சிதம்பரத்தில், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றவருக்கு உதவுவது போல் நடித்து, பணத்தை அபேஸ் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பூலாமேடு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர், நேற்று முன்தினம், சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றார். அங்கிருந்த மர்ம நபர், அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து, ஏ.டி.எம்., மில் பணம் எடுக்க முயற்சித்து, அக்கவுண்டில் பணம் இல்லை என கூறி, வேறு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு, சென்றுவிட்டார்.அடுத்த சில நிமிடங்களில், விஸ்வநாதன் கணக்கில் இருந்து ரூ. 7,500 பணம் எடுத்ததாக அவரது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன், சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.அதில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநன்றியூரை சேர்ந்த டேவிட் (எ) கலைவாணன், 56; என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் கலைவாணன், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வருவோருக்கு உதவுவது போல நடித்து, கார்டை மாற்றி கொடுத்து பலரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தது தெரியவந்தது.கலைவாணனிடமிருந்து 6 ஆயிரம் பணம் மற்றும் 15 போலி ஏ.டி.எம்., கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மர்மநபர் ஒன்னு தலைப்பாகையுடன் இல்லாட்டி பாவாடையுடன். இரண்டுபேரும் துரோகிகள்