உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்

ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்

சென்னை: வள்ளுவர்கோட்டம் பகுதியில், 1,500 கிலோ ரசாயனம் கலந்த தர்ப்பூசணியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.கோடை வெயில் அதிகரித்து வருவதால், நீர், இளநீர், தர்ப்பூசணி ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது. இவற்றை பயன்படுத்தி, பெரும்பாலானோர் தரமற்ற குடிநீர், ரசாயனம் கலந்து பழுக்க வைத்த தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க, அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கின்றனர்.அதன்படி, வள்ளுவர்கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தர்ப்பூசணி கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து, நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:

ரசாயனம் கலந்த தர்ப்பூசணியை வெட்டிப்பார்த்தால், வழக்கத்தைவிட அதிக சிவப்பு நிறத்தில் இருக்கும். 'டிஷ்யூ' பேப்பரால் தொட்டுப் பார்க்கும்போது, சிவப்பு நிறம் ஒட்டினால், ரசாயனம் கலந்ததை அறியலாம்.இது, முழுக்க முழுக்க கெமிக்கல் என்பதால், உணவு பொருளாக பயன்படுத்தக்கூடாது. சுவைக்காக,சர்க்கரைப்பாகுடன் கலந்து ரசாயனம் பூசப்படுகிறது. இதனால் எவ்வித வித்தியாசமும் தெரியாது. இதை சாப்பிட்டால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மணி
மார் 22, 2025 11:57

டீலிங் ஒத்து வரல போல் இருக்குது


Mecca Shivan
மார் 22, 2025 11:47

லயோலா காலேஜ் அருகிலும் அப்படிதான் ..இந்த வியாபாரம் எதோ சாலையோர வியாபிரிகள் தனியாக செய்யும் வேலை அல்ல. கோயம்பேடு வியாபிர்கள் முதல் வணிகர் சங்கம் வரை எல்லோருக்கும் தெரியும்.. என்ன செய்வது வியாபிரிகள் சங்கம் கட்ட பஞ்சாயத்துக்கு மட்டும்தான் என்றாகிவிட்டது ..


Varadarajan Nagarajan
மார் 22, 2025 09:29

மக்களுக்கு மனசாட்ச்சியே இல்லாமல்போய்விட்டது. நல்லது, கேட்டது, பாவம், புண்ணியம் என எதைப்பற்றியும் சிந்தனையே இல்லாமல் பணம் ஒன்றைமட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். சிறார்களாக பள்ளி செல்லும் பருவத்தில் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் கட்டாயமாக்கவேண்டும். ஆறாம் செய்ய விரும்பு, ஆறுவதுசினம் ... என்பனவற்றையெல்லாம் கற்பித்தபொழுது மக்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இவ்வளவு கேவலமாக நடந்துகொள்ளவில்லை. பள்ளிகளும் நீதியை கற்பிப்பவர்களும் மீண்டும் உயிர்பிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை