உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையில்லை: அண்ணாமலை வருத்தம்

தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையில்லை: அண்ணாமலை வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களில் 17.5 சதவீதம் பேருக்கு வேலையில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழக அரசு மக்களை முட்டாள் ஆக்குவதற்காக மற்ற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பீடு செய்து காட்டுகிறது. திமுக.,வின் தேர்தல் அறிக்கையில் 221வது வாக்குறுதியாக மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அதனை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தினால், ஒவ்வொரு குடும்பமும் பெருமளவு மின்கட்டணத்தை மிச்சப்படுத்தும்.

வேலையில்லா பட்டதாரிகள்

அண்டை மாநிலங்களில் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும்போது, அங்குள்ள மின்கட்டணத்தை தமிழகத்துடன் ஒப்பீடு செய்கிறார்கள். தமிழகத்தில் 15 முதல் 29 வயதுக்குள் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் விகிதம் 17.5 சதவீதமாக உள்ளது. ஆனால் குஜராத்தில் 6.1 சதவீதம், கர்நாடகா, மஹாராஷ்டிராவில், 7, 8 சதவீதமாக தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 17.5 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை திமுக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

பா.ஜ.,

ஆரம்ப காலத்தில் சீன மூங்கில் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் வளராது; வேர்கள் தான் பலமாகும். 90 நாட்களுக்கு பிறகு செடி வேகமாக வளரும். அதுபோல இப்போது பா.ஜ.,வின் வேர் பலமாகி வருகிறது. வளர்ச்சி வெளியே தெரியவில்லை என்று நினைத்து தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தக்கூடாது. எனது செயல்பாடுகள் பா.ஜ.,வினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம்; சில நேரம் ஒரு கால் பின்னோக்கி வைத்துத்தான் ஆக வேண்டும்; எடுத்தவுடன் 5வது கியரில் சென்றால் வண்டி ஓடாது. பா.ஜ.,வில் சேர பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் ஆகிய மூன்றும் அவசியம். பா.ஜ.,வை பலர் குறை சொல்வார்கள், அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.,வின் வேரை நாம் வலுவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலில் 8 ஆயிரம் பூத்களில் பா.ஜ., முதலிடம் பெற்றிருக்கிறது. வேர் வலுவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கனோஜ் ஆங்ரே
ஜூலை 22, 2024 19:08

இது... “சத்ரபதி சிவாஜி 1967ல காளிகாம்பாள் கோவிலுக்கு வந்து போனார்... கல்வெட்டில் இருக்கு...“ன்னு புளுகினிய அது மாதிரியா... அண்ணாமலை சார்...


siva
ஜூலை 22, 2024 18:17

இந்தியாவில் எத்தனை கோடிப்பேருக்கு வேலையில்லை, எத்தனை கோடிப்பேருக்கு தகுதுக்கேற்ற வேலையில்லை.


ramesh
ஜூலை 22, 2024 17:30

தமிழ் நாட்டில் 8000 பூத் கலீல் பிஜேபி முதலிடமா .20000 புத்தகம் படித்தேன் 2 லட்சம் எப்ஐஆர் போட்டேன் என்று சொன்ன கணக்கு போல தெரிகிறதே


ramesh
ஜூலை 22, 2024 17:25

15 வயதில் முதல் பட்டதாரியா? 20 வயது ஆனால் தானே தமிழ் நாட்டில் பட்டதாரி ஆகமுடியும் .முன்னாள் ஐபீஎஸ் பட்டதாரி ஆகும் வயதை 15 ஆக சுருக்கி விட்டாரே


palanivel
ஜூலை 22, 2024 16:52

ஆமாம் தல ஜாபர் சாதிக் பரக்கத் அலின்னு கஞ்சா வியாபாரி யா இப்போ சேர்த்து இருக்றாரு தெரியாதா


Rajarajan
ஜூலை 22, 2024 16:10

தெருவுக்கு பத்து என்ஜினீயர் உருவாக்கியது யார் குற்றம் ?? வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. சந்தேகமிருப்பின், சமீபத்திய கரும்பு ஜூஸ் பிழியும் கடையின் விளம்பரத்தை பார்க்கவும்.


Barakat Ali
ஜூலை 22, 2024 15:49

புச்சா யாருனா சேர்ந்தாங்களா தல?


Barakat Ali
ஜூலை 22, 2024 15:47

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக முதலீடுகள் தேவை ...... உள்ளூர் சாராய யாவாரிங்க கிட்டே வேலை வேணுமே ?? அதுக்குத்தான் எங்க தள்ளப்பட்ட்டி ......


Lion Drsekar
ஜூலை 22, 2024 15:40

திரும்பும் இடமெல்லாம் வேலைவாய்ப்புகள் மிக அதிக அளவில் இருக்கிறது . யாரும் வேலைக்கு வர தயாராக இல்லாமல் இருப்பதுதான் வருத்தம் . பல தன்னார்வ ஒண்டு நிறுவனங்கள் இலவசமாக வேலைவாய்ப்பை பெறுவதற்கு எல்லா பயிற்சியையம் கொடுக்கிறார்கள், அதைப் படிக்கவும் யாரும் முன்வருவதில்லை . சுயவேலைவாய்ப்பு மிக அதிக அளவில் உருவாக்கலாம் ஆனால் அவர்கள் வேலையை தொடங்குவதற்கு முன்பாகவே எல்லா துறைகளும் வரிக்கட்ட நோட்டீஸ் அனுப்புகிறார்கள் . இது சத்தியம் , வேண்டும் என்று சொல்லவில்லை, நீங்களே வீட்டு வாசலில் ஒரு போர்டு வையுங்கள் , சில தினங்களில் மின்சார வாரியம் வியாபாரத்துக்கு அயன்படுத்திகிறீர்கள் அந்த பணம் கட்டவேண்டும், சொத்துவரி, குடிநீர் துறை, தொழில் வரி, என்று ஒரு வரித்துறை விடாமல் தொடர்ந்து வரிவிதிக்கிறார்கள் . இப்படி இருந்தால் எங்கிருந்து சுயதொழில் செய்ய யார்தான் முன்வருவார்கள் ? வந்தே மாதரம்


அப்புசாமி
ஜூலை 22, 2024 15:37

இந்தியாவுல வேலை வாய்ப்பு எக்கச்சக்கமா கூடியிருக்காம். பொருளாதார அறிக்கையில் டி.வி ல காட்டறாங்க.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி