உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 45 மாதத்தில் 17.50 லட்சம் கார்டுகள் வினியோகம்

45 மாதத்தில் 17.50 லட்சம் கார்டுகள் வினியோகம்

கடந்த 45 மாத தி.மு.க., ஆட்சியில், புதிதாக, 17.50 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், ஒரு நெல்மணி கூட மழையில் நனைந்து வீணாகக்கூடாது என்பதற்காக, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செமி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 376 அரவை ஆலைகளில் நெல் அரைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 700 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு, அந்தந்த மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்ட, ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி வழங்கலாம்.தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது வினியோக திட்டத்தில், 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், நம் மாநிலத்தில் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து அரிசியை விலை கொடுத்து வாங்கி, மக்களுக்கு வினியோகம் செய்கிறோம். தமிழகத்தில், 100 அமுதம் அங்காடிகளை சீரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், சென்னையில் இரு அமுதம் அங்காடிகள் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இங்கு பொருட்கள் வாங்கினால், 1,000 முதல், 1,500 ரூபாய் வரை மாதந்தோறும் சேமிப்பு ஏற்படும். தேவைப்படும் இடங்களில், அமுதம் அங்காடிகளை திறக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.- சக்கரபாணி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை