உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த பிப்.,8ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று(பிப்.,22) இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது 19 மீனவர்களில் 18 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
பிப் 23, 2024 00:22

எங்க தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்ததால்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று திமுக அல்லக்கைகள் இப்பொழுது தற்பெருமை பேசும் பாருங்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு இருநூறு ரூபாயும், ஒரு பாட்டில் டாஸ்மாக் கொடுக்கவும் என்று சின்ன தலை கட்டளையிடும் பாருங்கள்.


M Ramachandran
பிப் 22, 2024 17:26

லெட்டர்பேட் ஸ் டாலி ன் இதற்கு அவர்களை மாலை போட்டு வரவேற்க செல்ல வில்லியா அவர் டில்லிக்கு கடிதம் எழுதியதால் வந்ததா பீற்றி கொள்ளா வேண்டுமல்லவா?


rama adhavan
பிப் 22, 2024 12:46

Automatic border alerting tem using GPS தமிழக மீனவர்களின் படகுகளில் பொறுத்த இயலும் : கண்காணிக்கவும் இயலும் என கூகிள் தேடுதலில் படித்தேன். இதை செய்யலாமே இப் பிரட்சினைக்கு முடிவாக.


R GANAPATHI SUBRAMANIAN
பிப் 22, 2024 12:35

மீனவர்களை விடுவித்த திராவிட மாடல் ஆட்சிக்கு நன்றி. தமிழர்கள் இதை உணர்ந்து திராவிடர்களை வரும் தேர்தலில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அண்ணா, பெரியார், மு.க நாமம் சொல்ல முடியும்.


Oviya Vijay
பிப் 22, 2024 12:32

காலங்காலமாக நம் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த கையாலாகாத மத்திய அரசு... இதில் அந்த நாட்டிற்கு நம் நாட்டிலிருந்து பண மற்றும் பொருள் உதவிகள் வேறு... அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அவர்கள் "உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே" என்பது போல் நம் நாட்டிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து, நம் எதிரி நாடான சீனாவிற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு உள்ளனர்... திடமான நடவடிக்கை எடுக்க இயலாத மத்திய அரசு... தமிழ்நாட்டை இந்த விஷயத்திலும் உதாசினப்படுத்துகிறது...


ஆரூர் ரங்
பிப் 22, 2024 13:54

உங்க நிலத்தில் அண்டை நிலத்துகாரர் அறுவடை செய்தால் சும்மா விடுவீர்களா????? திருட்டில் பாதிக்கபடுவது வட இலங்கை ஏழை தமிழ் மீனவர்கள்தான்.


rama adhavan
பிப் 22, 2024 18:44

தமிழக அரசுதான் மீனவர் படகுகளில் GPS கருவி பொருத்தி கண்காணித்து மீனவர் நமது கடல் எல்லையை தாண்டாது செய்ய வேண்டும். இந்த வேலை மதிய அரசயனுடையது அல்ல.


Duruvesan
பிப் 22, 2024 12:02

பார் போற்றும் மீனவ நண்பன், எல்லோருக்கும் விடியல் தந்த, கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க. கனி அக்காவின் நண்பர் ராஜ பக்சே வாழ்க. விடியலின் ராஜ தந்திரம்


sridhar
பிப் 22, 2024 11:45

இப்போ முதல்வர் நன்றி கடிதம் எழுதுவாரா இல்லை ஸ்டிக்கர் ஒட்டுவாரா .


Seshan Thirumaliruncholai
பிப் 22, 2024 11:31

மீனவர்கள் பிடிபடுவதும் விடுவிப்பதும் வாழ்க்கையில் ஒன்றிவிட்டது. இதனை செய்தியாய் அறிவிப்பதால் அரசியலாகி விட்டது. தமிழ்நாடு அரசு மத்திய அரசை அணுகிய பிறகு தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது என்ற பிம்பத்தை மக்களிடம் கொண்டு செல்லவேண்டாம்.


Balasubramanian
பிப் 22, 2024 11:22

தமிழக முதல்வர் மோடிஜிக்கு கடிதம் எழுதி தந்த அழுத்தம் காரணமாகவே இந்த விடுதலை - அனைவரும் வரும் தேர்தலில் இதனை கவனத்தில் கொள்ள கடமைப் பட்டவர்கள் ????


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை