உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் 19 அமாவாசை தான்: தி.மு.க., ஆட்சிக்கு தேதி குறிச்சாச்சு என்கிறார் இ.பி.எஸ்.,

இன்னும் 19 அமாவாசை தான்: தி.மு.க., ஆட்சிக்கு தேதி குறிச்சாச்சு என்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்; நாட்கள் எண்ணப்படுகின்றன' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு தி.மு.க., அரசு முடக்க நினைக்கிறது. தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு

சென்னையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மாநாகராட்சி பொறியாளர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியுடன் போடப்படும் வழக்கால் அரசு அதிகாரிகள் மத்தியில் தொய்வு ஏற்படும். மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டன.உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை என்று திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

தேதி குறிச்சாச்சு!

மக்களின் கவனத்தை திசைதிருப்ப லஞ்ச ஒழிப்புத்துறையை முதல்வர் ஸ்டாலின் ஏவி விட்டிருக்கிறார். அ.தி.மு.க.,வை முடக்கி எதிர்க்கட்சியின் செயல்களை தடுத்து நிறுத்தி விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அராஜக அரசின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் எங்களது செயல்களை தடுத்து நிறுத்திவிடலாம்.போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாகத் தமிழகம் விளங்கும் கேவலத்தை மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் என முதல்வர் ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார். தி.மு.க., ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்; நாட்கள் எண்ணப்படுகின்றன.சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Vijay D Ratnam
செப் 20, 2024 23:11

எடப்பாடி அவர்களே, திமுகவை குறைத்து மதிப்பிடாதீர்கள். சிங்கிள் லார்ஜஸ்ட் வோட் பேங்க் கட்சியாக அதிமுக இருக்கலாம். ஆனால் திமுக வெற்றி பெறுவதை பாருங்கள். திமுக எம்.பி கனிமொழிக்கும், அமித்ஷாவுக்கும் இடையே அரசியல்தாண்டி டீலிங்ஸ் உள்ளது. தவிர திமுகவுக்கு பாஜகவுடன் அண்டர் கிரவுண்ட் டீலிங்ஸ் பக்காவாக உள்ளது. திமுகவின் எதிர் வாக்குகளை அதிமுகவுக்கு வராமல் தடுத்து பிரிக்க சபரீசனால் பைனான்ஸ் செய்யப்படும் நாம் தழிழர் கட்சி உள்ளது. இப்போ நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பதும் திமுகவின் எதிர் வாக்குகளை அதிமுகவுக்கு செல்லாமல் தடுப்பதற்குதான். சீமானும் விஜய்யும் ஆளுக்கு ஐந்து முதல் ஏழு சதவிகிதம் ஓட்டுக்களை பெறுவார்கள். இந்த 12 முதல் 14 சதவிகித வாக்குகளில் எப்படியும் அதிமுகவுக்கு வரவேண்டிய பத்து சதவிகித வாக்குகள் உள்ளது. ஆனால் திமுக கூட்டணி உடையாமல் கரன்சி எனும் பெவிகால் போட்டு பக்காவாக ஒட்டி வைத்து இருக்கிறார்கள். திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், தமுமுக, முஸ்லீம் லீக் போன்ற கட்சி தொண்டர்கள் குடும்ப வாக்குகள் பல்க்காக திமுகவுக்கு வந்துவிடும். மற்றபடி பள்ளிவாசல்களால், பாதிரியார்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இஸ்லாமிய கிருஸ்தவ வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வந்துவிடும். இன்னொரு விஷயம் பாஜகவுக்கு இப்போது எதிரி திமுக அல்ல. அதிமுகதான். அதிமுகவின் அழிவில் மட்டும்தான் பாஜக வளர முடியும். தவிர அண்ணாமலை ரசிகர் மன்றம் மன்னிக்க தமிழ்நாடு பாஜகவும் அதிமுக வெற்றியை தடுக்கும். முழுசாக முழுங்கலாம் என்று அதிமுகவின் காலை சுற்றிய மலைப்பாம்மை லாவகமாக கழற்றி கடாசிய உங்களை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று பாஜக, உங்கள் மீது கொலைவெறியில் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். பாஜகவின் எடுபிடியாக மாறிப்போன பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் அவர்களால் முடிந்தளவுக்கு அதிமுகவின் இமேஜை டேமேஜ் செய்வார்கள். கவனம். இதை சொல்லுங்கள் எடப்பாடியாரே, சீனே மாறிவிடும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான் முதலமைச்சராக பதவியேற்கும் போது அந்த மேடையிலேயே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் உத்தரவை பிறப்பிப்பேன். தமிழ்நாட்டில் மதுபான தொழிற்சாலைகள் நடத்த முடியாதபடி மேடையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேடையிலேயே கையொப்பமிடுவேன் என்று அறிவியுங்கள். தென்னை, பனை விவசாயிகள் வாழ்வு வளம் பெரும் வகையில் பெரியளவுக்கு தீங்கு விளைவிக்காத கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்குவேன் என்று அறிவியுங்கள் வெற்றி உறுதி.


pandian s
செப் 20, 2024 21:05

இனி உங்களால் எதுவும் முடியாது சார்


pandian s
செப் 20, 2024 21:03

முடியாது இனிமேல் உங்கள் ஆயுதம்


ramesh
செப் 20, 2024 20:38

பழனிசாமி திடீர் என்று ஜோதிடர் ஆகி விட்டார்


sankaranarayanan
செப் 20, 2024 18:51

இவர் எப்போது அரசியல் கட்சி புரோகிதர் ஆனார் பாவம் இனி இவர் முதல்வர் என்ற நாமதேயமே இல்லாமல் போனதால் வேறு தொழிலை தேர்ந்தெடுத்தாற்போலத்தான் இருக்கிறது அதிலேயாவது சிறப்பாக திகழட்டும்


D.Ambujavalli
செப் 20, 2024 18:49

கொடநாடு, பொதுப்பணி வழக்குகளை புறவாசல் நட்பு கொண்டாடி முடக்கி வைத்துவிட்டு, இப்போது வீராவேசம் காட்டுகிறார் அடுத்து தன் கேஸ்கள் கிளம்பிவிடுமோ என்ற பதற்றம்தான் தெரிகிறது


Lion Drsekar
செப் 20, 2024 18:46

இவர் ஒரு பக்கம், டெல்லி ராஜகோபால் ஐயா ஒரு பக்கம், ஒன்றிய அரசு யாருமே பார்க்காத அவர்களின் ஊடகங்கள் ஒரு பக்கம் , இப்படி ஆளுக்கு ஒருபுறம் கூக்குரல் கொடுப்பது வயலில் பயிர் செய்வதற்கு போடும் உரம் போல் இவர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் அசுரர் வளர்ச்சி பெற்று ஆக்டொபஸ் போன்று மிகப்பெரிய அழற்சி அடைகிறார்கள் என்பதே உண்மை, வந்தே மாதரம்


Rajasekar
செப் 20, 2024 18:18

திருடர்கள் கூட்டம். திரு.காமராஜ் சொன்னது போல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.


என்றும் இந்தியன்
செப் 20, 2024 16:44

டாஸ்மாக்கினாட்டு குடிகார கஸ்மாலங்கள் அமாவாசை வெளிச்சத்தில் இருட்டில் இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிவது ஓட்டுக்கு பணம் ரூ 5000 திமுக வால்க வால்க வால்க வால்க வாழ்க அல்லவே அல்ல மோடி ஒழிக பிஜேபி ஒழிக என்று கத்துவதற்கு ரூ 200, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி இது மட்டுமே அவர்கள் கண்ணுக்குத்தெரியும் வரை எவ்வளவு அமாவாசை வந்தாலும் திருட்டு திராவிட ஆட்சி தான் டாஸ்மாக் நாசமாகபோக


Rengaraj
செப் 20, 2024 15:52

அண்ணா தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்தது. அதில் நிறைய முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்பட்டன. ஊழல் இல்லவே இல்லை , முறைகேடுகள் நடக்கவே இல்லை என்று யாரும் உறுதியாக யாருமே கூறவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க இதுசம்பந்தமாக எந்த போராட்டமும் செய்யவில்லை. திராவிட கழகங்கள் ஒன்றுக்கொன்று ஆதரவாக திரைமறைவு வேலையில் இருந்தன என்று வெளிப்படையாக பேசப்பட்டது. எடப்பாடி மீதான வழக்கை தி.மு.க வாபஸ் பெற்ற சம்பவம் எல்லாம் நிகழ்ந்தது. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கோ குற்றப்பத்திரிகையையோ தாக்கல் செய்யவில்லை. சென்ற சட்டசபை தேர்தலிலும் சரி, இப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் சரி, ஊழல் ஒரு விஷயமாக மக்களால் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. எனவே இந்த அமாவாசை , தேதி குறிப்பு என்பெதெல்லாம் நகைப்புக்குரிய விஷயமாக தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை