மேலும் செய்திகள்
மூன்று வார சிகிச்சையால் பூரண நலன்; வீடு திரும்பினார் ஹெச். ராஜா
2 hour(s) ago | 1
பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!
4 hour(s) ago | 27
ராஜபாளையம்: சிலை அவமதிப்பு தொடர்பாக, ஜெயிலில் உள்ள ராஜபாளையத்தை சேர்ந்த இருவர் மீது , தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலை மீது செப்.13 ல் அவமதிப்பு சம்பவம் நடந்தது. இதனால் பஸ் எரிப்பு, வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. சிலை அவமதிப்பு சம்பந்தமாக, ராஜேஷ்தாஸ் ஐ.ஜி., தலைமையில் போலீசார் சிலரை தேடினர். இதில், துரைசாமியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ், 30, மலையடிபட்டியை சேர்ந்த ரவி, 33, கைது செய்யப்பட்டனர். தற்போது ஜெயிலில் இருக்கும் இருவர் மீது , கலெக்டர் பாலாஜி பரிந்துரையின்படி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 1
4 hour(s) ago | 27