உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 நாள் சட்டசபை கூட்டம்; பழுது சரி பார்க்க ரூ.3 கோடி செலவு

2 நாள் சட்டசபை கூட்டம்; பழுது சரி பார்க்க ரூ.3 கோடி செலவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை 2 நாள் நடப்பதை முன்னிட்டு, 3 கோடி ரூபாய் செலவில் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.தி.மு.க., அரசு, 2021ல் பொறுப்பேற்ற பின், கொரோனா பரவல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டசபை கூட்டம் நடந்து வந்தது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததும், மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபை மாற்றப்பட்டது. அங்கு, 5 கோடி ரூபாய் செலவில் இருக்கைகள், மின் சாதனங்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rd5xlrzj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காகிதமில்லா சட்டசபையை நடத்தும் வகையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் மேஜையில் தொடுதிரை சிறு கணினிகள் பொருத்தப்பட்டன. ஆங்காங்கே எல்.இ.டி., திரைகள் வைக்கப்பட்டு, சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுகின்றன. தற்போது, இருநாள் மட்டுமே நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்திற்காக, மேஜைகள், கதவுகளுக்கு வார்னிஷ் பூசுதல், மைக், தொடுதிரை சிறு கணினிகள், மின் விளக்குகள், ஸ்பீக்கர் போன்றவற்றை பழுதுபார்த்தல், சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இது மட்டுமின்றி, ஆண் மற்றும் பெண் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றப்படுகின்றன. இப்பணிகளுக்கு, 3 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mani . V
டிச 07, 2024 16:42

எதிலும் கொள்ளை. எங்கும் கொள்ளை. மாடல்னா சும்மாவா?


கல்யாணராமன்
டிச 07, 2024 16:14

யானைக்கு பட்டு கோமானம் வாங்கி கட்டிய செலவு ரூ 1 கோடி என்று கணக்கு எழுதினால் கூட யாரும் எதிர்த்து குரல் எழுப்ப முடியாது.


S Regurathi Pandian
டிச 07, 2024 10:22

ஆடம்பரம் .


rasaa
டிச 07, 2024 09:44

கண்ணா, லட்டு திங்க ஆசையா? பழுதை சரி செய்ததை சரிபார்க்க மேலும் 2 கோடி செலவு. கணக்கு எழுத சொல்லிக் கொடுக்கவேண்டும். கூவம் படகு, வீராணம், சர்க்கரை......


kulandai kannan
டிச 07, 2024 09:43

ஏ...வ்...


D.RAMMANOHAR
டிச 07, 2024 09:39

என்ன?


Barakat Ali
டிச 07, 2024 09:08

கழக வழக்கப்படி பழுதுக்கு 300 கோடி ..... டீ , காப்பி , சிற்றுண்டி செலவுக்கு 30 கோடிதானே கணக்கு காட்டணும் ???? நேர்மாறா உலக நடப்புக்கள் நடந்தா இறுதிநாள் நெருங்கிவிட்டது ன்னு அர்த்தம் ....


சாண்டில்யன்
டிச 07, 2024 19:09

அப்போலோவில் இட்டிலி சாப்பிட்ட கணக்கு மறந்து போனதா.சும்மா 105 கோடி தான் அப்போ இவர் எங்கிருந்தாரோ


Nandakumar Naidu.
டிச 07, 2024 08:23

அதில் 2 கொடிகள் ஸ்வாஹா.


Govind
டிச 07, 2024 08:09

. யார் அப்பன் வீட்டு காசு அள்ளி செய்ய வேண்டியதுதான்


Shanmuga Sundaram
டிச 07, 2024 08:08

மக்களின் சேவகர்கள் கூடும் இடத்திற்கு பராமரிப்பு செலவு வெறும் 3 கோடி ரூபாய்தானா? குறைவாக இருக்கிறது.


முக்கிய வீடியோ