உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபரீதம்: விஷவாயு தாக்கி இருவர் பலி; மூவர் கவலைக்கிடம்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபரீதம்: விஷவாயு தாக்கி இருவர் பலி; மூவர் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 2 வாலிபர்கள் பலியாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3pllowfc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரில் சாய ஆலை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த ஆலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணுகோபால் உள்ளிட்ட 5 பேர் வந்துள்ளனர்.வழக்கம் போல், இருவரும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். சரவணன், வேணுகோபால் ஆகியோருடன் வந்திருந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
மே 20, 2025 04:03

இவர்களுக்கு அடிப்படை பயிற்சி கொடுக்குமளவுக்கு கூட நாட்டில் விஞ்ஞானம் வளரவில்லை என்பது வெட்கக்கேடு. மனிதனை மனிதனே அடிமைப்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியில்... என்ன கொடுமை.


D.Ambujavalli
மே 20, 2025 03:33

எதெதற்கோ யந்திரங்கள், சாதனங்கள் என்று கண்டுபிடிப்பவர்கள் இதற்கு ஒரு சாதனம் கண்டுபிடித்து ஏழை கூலியாட்கள் உயிர்களைக் காக்கக் கூடாதா? மற்ற நாடுகளிலெல்லாம் இத்தகைய பிரசனைக்கு மனித உயிர்களைத்தான் பலி கொடுக்கிறார்களா? அல்லது வாயு தாக்காத வகையில் பாதுகாப்பு சாதனங்களை கூட கொடுக்க முடியாதா ?


krishnan
மே 19, 2025 22:13

கம்பெனி அவருடைய மனைவிக்கு 50 லட்சம் தர வேண்டும் . அவர்கள் குழந்தைகளை மாஸ்டர் டிகிரி வரை free education.


Ravi Manickam
மே 19, 2025 21:55

அது சாதாரனமான விஷவாயு அல்ல H2S, Hydrogen sulfide எனும் கொடிய கணமான, நிறமற்ற அழுகிய முட்டை நாற்றமுடைய மரண வாயு, நமது அரசுகள் இந்த வாயு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இதை தினமலர் நாளிதழ் முதலில் செய்யும் என்று நம்புகிறேன்.


Krishnamurthy Venkatesan
மே 19, 2025 20:46

விஷ வாயு இருக்கிறது என எச்சரிக்கும் கருவிகள் இல்லையா அல்லது கண்டுபிடிக்க படவில்லையா? பாவம் அப்பாவி ஏழை மனிதர்கள். அவர்களின் குடும்பத்திற்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு தர வேண்டும்.


சமீபத்திய செய்தி