உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் அடிபட்டு 2 பேர் பலி

ரயிலில் அடிபட்டு 2 பேர் பலி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், ரயிலில் அடிபட்டு, 2 பேர் பரிதாபமாக இறந்தனர். வேலூர் டவுன் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய ரயில் பாதையில், நேற்று தலை, உடல், கால்கள் சிதறிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது ஒரு கையும், ஒரு பாதமும் அருகில் இருந்த குடிசைப் பகுதிக்குள் விழுந்து கிடந்தது. காட்பாடி ரயில்வே போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவர் ஐந்தரை அடி உயரமும், நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், வயலட் கலரில் வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். இறந்தவருக்கு, 30 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீஸார் விசாரிக்கின்றனர்.* அன்வர்த்திகான் பேட்டை- மகேந்திர வாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த பெண் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்