கொதிக்கும் ரசத்தில் விழுந்த 2 வயது குழந்தை மரணம்
வத்தலக்குண்டு: கோவில் அன்னதானத்திற்கு சமைக்கப்பட்ட ரசம் பாத்திரத்தில் குழந்தை விழுந்து இறந்தது. திண்டுக்கல் மாவட்டம், -எழுவனம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது வீட்டின் அருகில் உள்ள குலதெய்வம் கோவிலில், அன்னதானத்திற்காக ரசம் சமைக்கப்பட்டது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிவக்குமாரின் 2 வயது மகன் ஸ்ரீதரன், கொதித்துக் கொண்டிருந்த ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7yhx2m1q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது. வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.