உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு

லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புதிய மின் இணைப்புக்கு ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது.கடலாடி தாலுகா கீழபனையூர் துரைசிங்கம். இவரிடம் புதிதாக மின் இணைப்பு வழங்க மின் வாரிய இளநிலை பொறியாளர் முருகன் 68, ரூ.ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து துரைசிங்கம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி முருகன் துரைசிங்கத்திடம் ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற போது 2009 ஆக.,27 ல் கைதானார்.இவ்வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி மோகன்ராம் இளநிலை பொறியாளர் முருகனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
அக் 08, 2024 05:59

அடிச்சா ஐந்து கட்சி ..... மாதிரி கோடிக்கணக்கில் அடிக்கணும். புனிதர் பட்டத்துடன் வெளியில் வரணும். அதை விடுத்து ஆயிரம், ரெண்டாயிரம் என்று வாங்கி லஞ்சத்தையே கேவலப்படுத்தக்கூடாது.


முக்கிய வீடியோ