மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 20 பக்தர்கள் காயம்
பேரணாம்பட்டு : கர்நாடகா மாநிலம், கோலார் அடுத்த முதுவடி பகுதியை சேர்ந்த, 50 பேர் தனியார் பஸ்சில், மேல்மருவத்துாருக்கு புறப்பட்டனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது.அப்போது மலைப்பாதையின் முதல் வளைவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த, 20 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பேரணாம்பட்டு போலீசார் மற்றும் குடியாத்தம் ஆர்.டி.ஓ., சுபலட்சுமி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.