உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழு மாதங்களில் ரேபிஸ் நோயால் 20 பேர் உயிரிழப்பு: நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

ஏழு மாதங்களில் ரேபிஸ் நோயால் 20 பேர் உயிரிழப்பு: நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தமிழகத்தில் ஏழு மாதங்களில் நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 'ரேபிஸ்' நோயால், 20 பேர் உயிரிழந்துள்ளனர். நாய்க்கடிக்கான தடுப்பூசி போட்டிருந்தாலும், தொடர் சிகிச்சை அவசியம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.தெரு நாய்கள், வளர்ப்பு பிராணிகள் கடித்து, மனிதர்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றால் ஏற்படக்கூடிய, 'ரேபிஸ்' தொற்றில் இருந்து, செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காக்க, தடுப்பூசி மட்டும் ஒரே தீர்வாக உள்ளது. எனினும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதற்கு தொற்று வாய்ப்புக்கு பிந்தைய சிகிச்சை நடைமுறைகளை, சரிவர பின்பற்றாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.இந்த ஆண்டில் இதுவரை 3.67 லட்சம் பேர் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 20 பேர் ரேபிஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேபிஸ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர்.இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய்க்கடி காயங்களை முறையாக கிருமி நாசினி வைத்து துாய்மைப்படுத்தாமல் இருந்தால், தொற்று ஏற்படக்கூடும். தடுப்பூசிகளை தவற விட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, 'ரேபிஸ்' நோய் பரவுவதை தடுக்க முடியாது. ஆழமான காயங்களுக்கு, 'ரேபிஸ் இம்யூனோ குளோபுலின்' எனப்படும், விரைவு எதிர்ப்பாற்றல் மருந்துகளை வழங்காமல் இருப்பதும், ரேபிஸ் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது. காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட்டு, சிகிச்சை பெற வேண்டும்.மேலும், முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21வது நாள் என, நான்கு தவணைகளாக தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். இது போன்ற தொடர் சிகிச்சைகளை தவற விடுவோருக்கு, ரேபிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பு நிச்சயமாக உள்ளது. எனவே, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெற்றால், ரேபிஸ் பாதிப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

J.Isaac
ஆக 16, 2025 14:25

நகரங்களில் இரவு நேரங்களில் ஆறறிவு படைத்த மனிதர்கள் குடித்து வெறித்து அருவருப்பான செய்கைகளில் ஈடுபட்டு சமுதாயத்தை கெடுக்கும் நாய்கள் போல அலைகிறவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்

தாமரை மலர்கிறது
ஆக 16, 2025 00:04

நாய்களுக்கு வருடந்தோறும் ரேபிஸ் மற்றும் பார்வா ஷாட் கொடுக்கவேண்டிய நகராட்சி, அந்த பணத்தை ஊழல் செய்ததன் விளைவு இது. ஊழல் செய்பவர்களை ஒன்றும் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் தெருவில் உள்ள எல்லா நாய்களையும் அடித்து கொல்லவேண்டும் என்று வெறிபிடித்து திரிபவர்களை திருத்தமுடியாது. நாய் அன்பான ஜீவன். திருந்த வேண்டியது மனுஷன் தான். கல்லையெடுத்து அடிப்பதை நிறுத்துங்கள். பசியோடு உங்கள் தெருவில் இருக்கும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுங்கள். உங்களை எப்போதும் நன்றியோடு பார்க்கும். விசுவாசத்துடன் இருக்கும். அன்போடு இருக்கும். பாதுகாப்பாக இருக்கும். தெருவில் போகும்போது வரும்போது, நீங்கள் தான் ராஜா. அதைவிட்டு பயந்து கல்லையெடுத்து அடித்தால், கடிக்கும் தான்.

சிவா. தொதநாடு.
ஆக 15, 2025 22:00

நகரங்களில் நாய்கள் கிராமங்களில் பன்றிகள் நல்ல வளர்ச்சி

Ram
ஆக 15, 2025 21:47

அணைத்து தெரு நாய்களையும் அதை சப்போர்ட் செய்பவர்களையும் தூக்கவேண்டும்

Ramesh Sargam
ஆக 15, 2025 21:34

நாய்களால் ரேபிஸ் நோய் பாதிப்பு. திமுகவினரால் ஒட்டுமொத்த தமிழகமே பாதிப்பு.

பிரேம்ஜி
ஆக 16, 2025 07:31

உண்மைதான்!

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை