உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலுாரில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை!

வேலுாரில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: வேலுாரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்புஅளி்த்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய நால்வருக்கு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த சிறுவனுக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.வேலுார், காட்பாடி சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த பீஹாரைச் சேர்ந்த பெண் டாக்டர், நாக்பூரை சேர்ந்த ஆண் டாக்டர் இருவரும் 2022 மார்ச், 16ல் காட்பாடியில் சினிமா பார்த்து விட்டு அறைக்கு திரும்பினர்.வழியில் இருவரையும் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில், வேலுார், பாலாறு பகுதிக்கு கடத்தி, 40,000 ரூபாய், 2 சவரன் நகை மற்றும் மொபைல்போனை பறித்தனர். பின்னர், ஆண் டாக்டரை தாக்கி, பெண் டாக்டரை அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து தப்பினர்.பெண் டாக்டர் ஆன்லைனில், வேலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் அளித்தார். வேலுார் வடக்கு போலீசார், சத்துவாச்சாரி வ.உ.சி., நகர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன், கூலித்தொழிலாளி மணிகண்டன், பரத், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேரை கைது செய்தனர்.வேலுார் மகளிர் நீதிமன்றத்தில் ஜன.30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, குற்றவாளிகளுக்கு தலா, 20 ஆண்டுகள் சிறை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சிறுவனுக்கு இன்று 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

NIyayanidhi
பிப் 21, 2025 08:26

துண்டுச் சீட்டு வாயை திறந்தாலே பொய்தான்.புரட்டு திராவிடன் அல்லவா?


Anonymous
பிப் 19, 2025 12:13

பாலியல் வன்கொடுமை செய்ய தெரிந்தவனை, வயதை காரணம் காட்டி, சிறுவன் என்று கூறுவது மிக மிக அபத்தமான, வெட்க கேடான விஷயம், இதை எல்லாம் ஏன் கோர்ட் யோசிப்பதில்லை என்று புரியவில்லை.


வேலூர்குரு
பிப் 19, 2025 07:22

ஆறுமாசத்தில் அண்ணா பொறந்தநாள், 8 மாசத்தில் காந்தி பொறந்தநாள் வருது அடுத்த வருஷம் தேர்தல் வருது. கொஞ்சம் பொறுமையா இருங்க. ரிலீஸ் பண்ணிடலாம்.


pandit
பிப் 19, 2025 06:56

"அப்பா"வின் ஆசி மகனுக்கு உள்ளது


Kasimani Baskaran
பிப் 19, 2025 06:35

நன்னடத்தை மூலம் வெளியே வந்து சாருக்கு உதவியாளராக சேர்ந்து விட வாய்ப்பு அதிகமிருக்கிறது.


D.Ambujavalli
பிப் 19, 2025 06:10

அரசு செலவில், நம் வரிப்பணத்தில் நிம்மதியாக ‘மணியடிச்சா சோறு , மாமியாரு வீடு’ என்று 20 வருஷம் இவர்களுக்கு விருந்து படைக்காமல், நேராக ‘அனுப்பி’ வைத்தால் பல ‘சார்களுக்கு’ பயம் வரும்


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 18, 2025 23:45

மரண தண்டனைனு ஒருத்தர் சொல்லிவிட்டு துண்டு சீட்டை தவறவிட்டுட்டார்


NAGARAJAN MUTHUSAMY
பிப் 18, 2025 22:46

punishment should be raw and severe


Karthik
பிப் 18, 2025 22:14

இதுபோன்ற தெருநாய்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் இல்லையேல் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும்.முடியாதெனில் கோர்ட் மத்திய சட்ட துறைக்கு பரிந்துரை செய்து சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். 10 ஆண்டு 20 ஆண்டு ஆயுள் தண்டனை என்று வழக்கம் போல் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் குற்றவாளியின் தண்டனைகால முழு செலவையும் அந்த நீதிமானே ஏற்க வேண்டும். பொதுமக்கள் வரிப்பணத்தில் கூடாது.


Haja Kuthubdeen
பிப் 18, 2025 22:12

தண்டனை போதுமா??சாகும் வரை கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்கலாம். இவனுங்களுக்கு அரசு செலவில் வேறு சாப்பாடு வேறு..அரபுநாடு போல் கடுமையான தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.