209 பெண் காவலர்களுக்கு விருப்பப்படி இடமாற்றம்
சென்னை : தமிழக அரசு அறிக்கை:'மகப்பேறு விடுப்பு முடிந்து, பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் வழங்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, பல பெண் காவலர்கள், தங்களது பேறுகால விடுப்பிற்கு பிறகு குழந்தைகளை கவனித்து கொள்ள வசதியாக, பணியிட மாறுதல் கேட்டு, விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து, கடந்த 3ம் தேதி வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த, 209 பெண் காவலர்களுக்கும், அவர்கள் விரும்பிய இடத்திற்கு, பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.