உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி தாளாளருக்கு 23 தமிழ் ஆசிரியருக்கு 43

பள்ளி தாளாளருக்கு 23 தமிழ் ஆசிரியருக்கு 43

கரூர் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஆலம்பாடியை சேர்ந்தவர் யுவராஜ், 41; கரூர் மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர். திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த நிலவொளி, 42; அப்பள்ளி தமிழ் ஆசிரியர். கடந்த 2022ல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு, இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். மாணவியின் பெற்றோர், லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். யுவராஜ், நிலவொளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி தங்கவேல், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார்,நிலவொளிக்கு, 43 ஆண்டு; யுவராஜுக்கு, 23 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் தலா, 1,000 ரூபாய்- அபராதமும் விதிக்கப்பட்டது. சிறுமிக்கு, 7 லட்சம் ரூபாய்- நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

m.arunachalam
மே 16, 2025 21:52

இவ்வாறான தண்டனைகள் சமூகத்தில் பலவித நல்ல மாற்றங்களை கொண்டு வரும் . ஆண்கள் கட்டுப்பாட்டுடன் நடக்கும்போது பெண்களின் ஆணவமான செயல்களும் குறையும் . குடும்ப பெண்கள் கணவர்களின் தேவைகளை , அவசியத்தையும் உணரவேண்டும் .


Santhakumar Srinivasalu
மே 16, 2025 14:29

நிவாரணத்தை ஆளுக்கு ₹ 50 லட்சமாக உயர்த்தி தரலாம். அப்போது தான் இவனுகளுக்கு புத்தி வரும்!


Kanns
மே 16, 2025 10:13

There is No Dearth of False Cases & PowerMisuses. FastTrack Cases & Punish RealAccused, If there is Concrete Evidences & Circumstances most witnesses are Cookedup. If Not Equally Punish False Complainants, PowerMisusers & All Vested-Selfish Supporting Criminals. For Most World Maladies esp False Cases, Crl Case Hungry Criminals police & magistrates, NewsHungry BiasedMedia, VoteHungry Parties are Responsible. Sack & Punish All Judges Not Giving Unbiased-Quality-Fast Judgements at Cheaper Costs Jr advocates and Not Punishing them, PowerMisusing Rulers, Stooge Officials & Vested False Complainant Gangs women, unions/groups, SCs, advocates etc.Appoint Only Acquitted NonAdvocate Citizens as Judges with postSelection Law Trainings & Promotions till SC purely on above Merits.


மனி
மே 16, 2025 09:21

இன்னும் நிறய உள்ளத. சீழ்கோர்ட்டு மேல் கேர்ட்டு அது. இது ணு ஒன்னும் நடக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை