உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. அதன் முக்கிய கட்டமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தற்போது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர், உதவி கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்னர். 234 தொகுதிகளுக்குமான அதிகாரிகள் யார், அவர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sundar R
மே 31, 2025 13:26

அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள், கட்சித் தொண்டர்கள், குறிப்பாக ₹. २००/- உபிக்கள் போன்றவர்களை தேர்தல் ஆணைய அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது. 2024 பாராளுமன்ற தேர்தலின் போது அண்ணாமலை போட்டியிட்ட கோயம்புத்தூரில் வழக்கமாக ஓட்டு போடும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தது. இது திமுகவினரின் தேர்தல் மோசடியாக இன்றளவும் கருதப்படுகிறது. 2026 அசெம்பிளி தேர்தலில் மோசடி செய்ய முடியாதவாறு மத்திய அரசின் தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும். அதிமுக, பாஜக மற்றும் இதர தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மீண்டும் திமுக மோசடி செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தி தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற வேண்டும்.


முக்கிய வீடியோ