2599 போலீசாருக்கு டிச.4ல் பயிற்சி
சென்னை:தமிழக காவல் துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 621 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மற்றும், 2559 இரண்டாம் நிலை காவலர்களுக்கு, டிச., 4ல் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.சென்னை அடுத்த ஊனமாஞ்சேரி காவலர் உயர் பயிற்சியகம் மற்றும் பயிற்சிப் பள்ளிகளில், பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. இதில், காவல் துறையில் பணிபுரிய ஆயத்தமாகுதல், சட்ட நுணுக்கம் மற்றும் சூழலை எப்படி கையாளுவது, புலன் விசாரணை ஆகியவை குறித்து, பயிற்சி அளிக்கப்படும்.மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் என, 1000 பேருக்கு, விரைவில் முதல்வர் ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.