உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 28 ரயில்கள் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

28 ரயில்கள் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

சென்னை:புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதையடுத்து, மண்டபம் வரை இயக்கப்பட்ட ரயில்கள், இன்று முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுகின்றன.குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கான்ட் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் ஷ்ரத்தா சேது விரைவு ரயில், பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயில் உட்பட 28 ரயில்கள், ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுகின்றன.அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மண்டபம் வரை இயக்கப்பட்ட ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது.அந்த வகையில் நேற்று எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயில், இன்று காலை 8:10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். அங்கிருந்து மாலை 5:30 மணிக்கு எழும்பூருக்கு ரயில் புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ray
ஏப் 06, 2025 07:40

சென்னை எழும்பூரில் இருந்து மண்டபம் வரை இயக்கப்பட்ட ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது. இதுதான் ஒரிஜினல் மதராஸ் தனுஷ்கோடி போட் மெயிலாக விளங்கி தனுஷ்கோடி இயற்க்கை சீற்றத்தால் அழிந்து போனதால் அதை மாற்றி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 101 தென்னக ரயில்வேயின் மீட்டர் கேஜ் ரயிலிகளில் முதல் எண். ராமேஸ்வரத்தை தூக்கிப் பிடிக்க எண்ணினார்கள். அதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு போக்குவரத்து சீரழிந்து க்ஷேத்ராடனத்துக்கு பின்னடைவானது.


புதிய வீடியோ