உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பா.ம.க.,விலிருந்து சஸ்பெண்ட்: ராமதாஸ்

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பா.ம.க.,விலிருந்து சஸ்பெண்ட்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பா.ம.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ராமதாஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், ஆறு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். ஆனால், பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், நான் தான் தலைவர் என அன்புமணி கூறியுள்ளார். மேலும், கட்சியில் இருந்து அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்க, அவர்களை மீண்டும் அன்புமணி நியமித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ydzdc97j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபையில் பா.ம.க.,வுக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் சமூக நீதி பேரவைத் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பாலுவும் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.இந்நிலையில் இந்த 4 பேரையும் பா.ம.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.இது தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளரான தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் , நான்கு பேரும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். கட்சியினர் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராஜா
ஜூலை 20, 2025 22:27

அன்பு மணி அமைச்சராக இருக்கும் போது என்ன செய்தார், தனக்கு இரு மருத்துவ கல்லூரிகள் அமைத்துக்கொண்டார் . வன்னிய மக்களுக்கு என்ன செய்தார் என்பது ஊர் அறிந்த உண்மை. இப்போது லபலப என்று சத்தம் போட்டு மைக்கில் உரத்த குரலில் பேசி என்ன பிரயோஜனம்?


sankaranarayanan
ஜூலை 20, 2025 21:09

கட்சியில் பிரமுகர் ஒவ்வொருவரையும் இப்படியேநீக்கிக்கொண்டே சென்றால் எஞ்சி இருப்பது அவர் ஒருவர்தான்.இதென்ன கட்சியா அல்லது ராமதாஸின் காட்சியா...


தமிழ்வேள்
ஜூலை 20, 2025 18:50

அன்புமணியை சஸ்பென்ட் செய்ய வக்கற்ற மருத்துவர் பெரிய மாங்கனி...சுற்றுப்பட்ட ஆட்களை சஸ்பென்ட் செய்யுதாம்... சரியான காமெடி... அப்பனும் புள்ளையும் நன்றாக வன்னிய மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள்..


Jack
ஜூலை 20, 2025 15:38

வைகோ மகன் ..இராமதாஸ் மகன் ….


Jack
ஜூலை 20, 2025 15:31

என்ன ராமு இதெல்லாம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை