உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

சென்னை;ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு பணி, கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் உளவுத்துறையில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக மகேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக, டி.ஜி.பி., அலுவலகத்தில், அருளரசு பணிபுரி கிறார். இவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, தலைமையிடத்து எஸ்.பி., யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கோவையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக சசிமோகன் பணிபுரிகிறார். இவருக்கு, அந்த பிரிவின் மதுரை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி