உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்

திருப்பூர்: திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக்கவுண்டம்பாளையத்தில், விவசாய தம்பதி, மகன் என மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அலமாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று (நவ.,29) அடையாளம் தெரியாத நபர்களால் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8fa5f2mz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது குறித்து அப்பகுதி மக்களுக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தோட்டத்தில் வீடு அமைந்து உள்ளதால் சி.சி.டி.வி., கேமரா ஏதும் இல்லை. இதனால் அருகில் வசிக்கும் விவசாயிகள், கிராம மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 தனிப்படைகள் அமைப்பு

இது குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறியதாவது: பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பு இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகை குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தோட்டத்தில் வேலை பார்த்தவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.திருட்டுக்காகவா...முன் விரோதமா?திருப்பூர் அருகே விவசாய தம்பதியர், அவர்களின் மகன் என மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதில், கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வெறும், 6 சவரன் நகைக்காக நடந்த கொலைகளா அல்லது முன்விரோதம் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

hari
நவ 29, 2024 21:01

வட நாட்டு சங்கி சுட்ட பரோட்டாவை சாப்பிடு ஜீரணம்.ஆகாமல் இருந்தால் வேணுகோபால் ஜெலுசில் சாப்பிடலாம்


ராமகிருஷ்ணன்
நவ 29, 2024 17:19

கொலைகார திமுக அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திறனற்ற திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஆக ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.


krishnan
நவ 29, 2024 17:11

என்சௌண்டேர் இந்த பிரச்னையை முடிக்கும், வேறு வழி இல்லை . ஹோம் மினிஸ்டர் தண்டம் ..


venugopal s
நவ 29, 2024 17:07

கடைசியில் பாருங்கள்,இது நமது வட நாட்டு ‌சங்கிகளின் வேலையாக இருக்கும்!


nsathasivan
நவ 29, 2024 16:17

இங்கு நடக்கும் கொலை கொள்ளை கஞ்சா அபின் கள்ளச்சாராய விஷயங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்த லட்சணத்தில் மணிப்பூரை மைக்கிராஸ்கோப் கொண்டு பார்க்கத்தோணுதாம்.


RK
நவ 29, 2024 16:08

திமுகவிற்கு இந்து மக்களின் ஓட்டு இல்லை.


RK
நவ 29, 2024 16:08

திமுகவிற்கு இந்து மக்களின் ஓட்டு இல்லை.


R.MURALIKRISHNAN
நவ 29, 2024 14:44

கொலை, கொள்ளை மற்றும் திருடர்கள் சுதந்திரமாகவும் மக்கள் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே இடம் தமிழ்நாடு தான். ஒருவேளை சர்வாதிகாரி ஆட்சியால் இப்படியோ.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 29, 2024 13:35

துரைமுருகனை முதல்வர் ஆக்கினால் சட்டம் ஒழுங்கு ஓரளவாவது சரியாகும் ........


Ramesh Sargam
நவ 29, 2024 12:52

தமிழகம் குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக உள்ளது. ஆளும் திமுக கட்சி உடனே பதவி விலகவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை