உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி: நீதிபதி காயம்

லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி: நீதிபதி காயம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற கார் மேலகரந்தை அருகே லாரி மீது மோதியதில் நீதிபதி பாதுகாவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் நீதிபதி ஆன்ந்த் படுகாயம் அடைந்துள்ளார்.தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி ஆனந்த் 6 பேருடன் காரில் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற கார் மேலகரந்தை அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் நீதிபதி பாதுகாவலர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜூன் 13, 2025 18:53

கதி சக்தி ஹைன். தூள் கெளப்புது ஹைன். லாரிங்களுக்கு தனி ரோடு போடுங்க.


வாய்மையே வெல்லும்
ஜூன் 13, 2025 19:45

நீங்க பாக்கிஸ்தான் போங்க.அங்குட்டு ரோடு பள்ளம் ஏம்புட்டு என பார்த்துட்டு இம்ரான் ஆட்களுக்கு கடிதம் போடுங்க.இப்போ சர்வாங்கத்தையும் அடக்குங்க. இந்தியா உப்பு தின்னுட்டு தூத்துவது தப்பு, திருந்துங்க.


Saravana Kumar
ஜூன் 15, 2025 20:47

அப்படியே உங்க நாட்டுக்கு போயிடுங்க


திருட்டு திமுக
ஜூன் 13, 2025 13:44

அநீதிக்கும் அராஜகத்துக்கும் நீதி வழங்கி இருப்பார் அதான் முருகப்பெருமான் நீதி வழங்கி இருக்கிறார். நீதிபதி பாதுகாவலர் தான் நடுவில் இருந்து பல படுபாதக செயலை செய்து இருப்பாரோ என்னவோ..


GMM
ஜூன் 13, 2025 13:31

நீதிபதி போன்ற முக்கிய பிரமுகர் வாகனத்திற்கு பிறர் வழி விட வேண்டியது கட்டாயம். வழி விட்டு இருந்தால் மோத வாய்ப்பு இல்லை. நீதிபதி என்பதால், சாலை விதி ஓட்டுநர் கண்டிப்பாக கடைபிடித்து இருப்பார். கார் லாரியின் மீது மோதியதா அல்லது மோத ஏற்பாடு செய்ய பட்டதா? கவர்னர் மத்திய அரசுக்கு விசாரணை கோரி கடிதம் எழுத வேண்டும். மத்திய உள்துறை விசாரணை பொறுப்பு ஏற்க வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 13, 2025 12:54

தமிழகத்தில் தினம் தினம் சாலை விபத்துக்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது.


Nada Rajan
ஜூன் 13, 2025 12:46

ஆழ்ந்த இரங்கல்


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 11:44

சதித்திட்டம் போல உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை