உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, திருப்பூர் உள்பட 32 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம்

கோவை, திருப்பூர் உள்பட 32 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த 32 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதகை மாவட்ட தலைமை நீதிபதி செந்தில்குமார் உதகை மகிளா நீதிமன்றம் நீதிபதியாக நியமனம் கோவை மாவட்ட தலைமை நீதிபதி ராஜலிங்கோம், திருப்பூர், உடுமலைப்பேட்டை கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமனம் திருப்பத்தூர் மாவட்ட தலைமை நீதிபதி ஓம் பிரகாஷ், சென்னை சிவில் கோர்ட் (சி.பி.ஐ., வழக்குகள்) நீதிபதியாக நியமனம் நாகை மாவட்ட நீதிபதி கார்த்திகா, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நாகை சிறப்பு கோர்ட் நீதிபதியாக நியமனம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட தலைமை நீதிபதி ப்ரீத்தா, ஸ்ரீவில்லிப்புத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமனம் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு, கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமனம் சென்னை கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், தஞ்சை முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமனம் அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமனம் திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமனம் இதேபோல, மேலும் பல நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
நவ 06, 2024 22:04

அடப்பாவமே... முன்னாடில்லாம் கலெக்டர், போலீசைதான் தூக்கியடிப்பாங்க. இப்போ நீதிபதிகளும் மாட்டிக்கிட்டாங்க.


புதிய வீடியோ