உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் உள்ள, அரசு சுபாஷ் சந்திரபோஸ் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் உள்ள, அரசு சுபாஷ் சந்திரபோஸ் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக, அவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நான்கு மாணவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று பள்ளிக்கு திரும்பினர். சிகிச்சை பெற்று சென்ற மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில் டாக்டர்கள் மீண்டும் உடல் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.திடீரென இத்தனை பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கு காரணம் என்ன, உணவு, தண்ணீரில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது பற்றி, பள்ளியில் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Santhakumar Srinivasalu
ஜூலை 17, 2025 13:29

இந்த மாதிரி சம்பவங்களுக்கு கண்காணிப்பாளர் தான் பொறுப்பு என்று அரசாங்கம் அரசாணை வெளியிட வேண்டும்