உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிட கட்சிகளின் தோளில் ஏறாமல் வளர்கிறது பா.ஜ.,: அண்ணாமலை பேட்டி

திராவிட கட்சிகளின் தோளில் ஏறாமல் வளர்கிறது பா.ஜ.,: அண்ணாமலை பேட்டி

சென்னை: இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., ஓட்டுகளை பெற்றுள்ளதாகவும், திராவிட கட்சிகளின் தோளில் ஏறாமல் பா.ஜ., வளர்வதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., கட்சி வளர்ந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்கள் எம்.பி.,க்களை பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும் என இலக்கு வைத்திருந்தோம். அதனை அடைய முடியாதது வருத்தம். எங்களுக்கு ஓட்டு சதவீதத்தை அதிகரித்து தர வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் தீர்ப்பை பா.ஜ., தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது.

இண்டியா கூட்டணி

தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெற்ற இண்டியா கூட்டணிக்கு வாழ்த்துகள். பிரதமரின் நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர பா.ஜ., முழு ஒத்துழைப்பு அளிக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. கோவையில் நான் பெற்ற 4 லட்சம் ஓட்டுகளும் பணம் கொடுக்காமல் பெற்றவை. வரும்காலத்தில் இன்னும் கடினமாக உழைத்து வெற்றி பெறுவோம். திராவிட கட்சிகளின் தோளில் நிற்காமல் பா.ஜ., வளர்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் 33 சதவீத ஓட்டுகளை பெற்ற திமுக.,வுக்கு இந்த முறை 6 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. அப்படியிருக்கையில் வெற்றிப்பெற்றது போல கொண்டாடுகின்றனர். 5 முறை ஆட்சியில் இருந்த கட்சியை கூட டெபாசிட் இழக்க செய்தது பா.ஜ., தான். 3 முனை போட்டி, 2 முனை போட்டியாக மாறியதால் தான் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. 2 முனை போட்டியாக இருந்தால் தான் இலக்கை அடைய முடியும்.

நாவடக்கம்

என்னிடம் நாவடக்கம் என்று சொல்பவர்கள் நாவடக்கத்துடன் பேசியிருக்க வேண்டும். அதிமுக 3வது இடம் பிடித்தது, நாவடக்கத்துடன் பேசாததற்கு மக்கள் கொடுத்த பரிசு. 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிப்பதே எங்கள் இலக்கு. அப்போது கூட்டணி ஆட்சி அமையும் என்பது என் கணிப்பு. எனக்கான வேலை பா.ஜ.,வை வளர்ப்பதே தவிர, மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது அல்ல. இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியை தக்க வைத்ததே சாதனைதான். உலகளவில் கொரோனாவுக்கு பிறகு வேறு எந்த அரசும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவில்லை. அரசியல் ரீதியாக எதிர் சித்தாந்தம் கொண்டிருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும் பாராட்டுகிறேன். பணம் கொடுக்காமல் அவர்கள் ஓட்டு பெற்றதற்காகவும் பாராட்டுகிறேன். கூட்டணி ஆட்சி பா.ஜ.,வுக்கு புதியது அல்ல; கூட்டணி ஆட்சியை பிரதமர் மோடி சிறப்பாக நடத்திக் காட்டுவார். கனிமொழி பா.ஜ.,வுக்கு வருவதாக இருந்தால், நான் தலைவர் பதவியில் இருந்து விலகுவது பற்றி பரிசீலிக்கிறேன். விவசாயியின் மகனான அண்ணாமலை, தேர்தலில் படிப்படியாக தான் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Nallavan
ஜூன் 07, 2024 07:35

அ ம மு க, ஒபிஸ் திராவிட கட்சிகளே


Guna
ஜூன் 07, 2024 02:07

இது வரை அவர்கள் தோளில் அமர்ந்து தான் பயணத்தை ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் பயணித்து இன்று திடீரென தனித்து வந்தோம் என உருட்டு. இப்பவும் கூட்டணி அமைத்து தானே களம் கண்டீர்கள் ? அதிமுக மீண்டும் ஒன்றுபட்டு பமக தேதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது திமுகவுக்கு சவால் மட்டுமல்ல, உன் பாடு நிச்சயம் திண்டாட்டம் தான். அவர்கள் உடைந்திருப்பதால் நீ ஆதாயம் அடைகிறாய். பீற்றிக்கொள்ள ஒன்னுமில்லை


Sivasankaran Kannan
ஜூன் 07, 2024 11:19

திராவிட மங்குனி மூளை.. உங்கள் தலைவர்களால் எந்த ஒரு பிரச்சனை பற்றியும் பேச கூட தெரியாது.. உங்கள் மூளை அளவிற்கு 20 சதவீதம் கூட இருக்காது.. அவர்களுக்கு முட்டு கொடுக்காமல் நீங்கள் யோசியுங்கள்.. கூஜா மற்றும் சொம்பு , பல்லக்கு போன்றவற்றை நமது அடுத்த தலைமுறை தூக்காமல் இருக்கட்டும்.


Jagan (Proud Sangi)
ஜூன் 07, 2024 01:45

காங் பல ஆண்டுகள் இரு கழங்களுடன் சவாரி செய்து இப்போ சொந்த கால்களை இழந்து விட்டது


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2024 01:05

பணம் கொடுக்காமல் பெட்ர ஓட்டுக்கள் என்பதுதான் மிகசிறந்த ஆக்கபூர்வமான செயல்


spr
ஜூன் 06, 2024 04:33

"நாவடக்கத்துடன் பேசாததற்கு மக்கள் கொடுத்த பரிசு" இதனை அண்ணாமலை உணர்ந்தால் உருப்படுவார். பாஜக இபிஎஸ் தேமுதிக பாமக கூட்டணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் இவரின் அடாவடித்தனமான பேசும் ஜெயக்குமார் இரு கட்சிகளும் இணையாதிருக்கச் செய்த சதியும் பாஜகவுக்கு இப்படிப்பட்டதொரு தோல்வியைத் தந்துள்ளது பாஜக தோற்பது பெரிய செய்தியல்ல. ஆனால் மோடியின் மதிப்பு குறைய, பிற கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இவரும் ஒரு காரணம் இன்னமும் கூட இவர் பிறருடன் அனுசரித்துப் போவது தனது இயல்பல்ல என்று கூறினால் இவர் ஒரு அரை வேக்காடு அரசியலில் தன் கற்பு கெடாமல் பிறருடன் சேர்ந்து வாழ்வதுதான் மாபெரும் சாதனை திரு ரங்கராஜ் பாண்டே கூறியது போல ஆத்திரமூட்டும் வகையில் பிறர் பேசினாலும் அமைதியாக அதனை எதிர்கொள்வதுதான் அனுபவமிக்க கலைஞர் போன்ற அரசியல்வியாதிகளின் சிறப்பு


பிரேம்ஜி
ஜூன் 06, 2024 08:55

கூட்டணியை கெடுத்த அண்ணாமலையும் ஜெயகுமாரும்தான் திமுக அணியின் இமாலய வெற்றிக்கு காரணம். இது மரமண்டைகளுக்கு இன்னமும் புரியாது.


Jagan (Proud Sangi)
ஜூன் 06, 2024 00:39

தோளில் சரிசெய்த காங்கிரசுக்கு இப்போ கால்களே இல்லை


venugopal s
ஜூன் 05, 2024 23:00

தமிழகத்தில் திமுகவை வெறுப்பவர்கள் பத்து சதவீதம் பேர் இதுவரை அதிமுகவை ஆதரித்து வந்தவர்கள் இப்போது பாஜகவை ஆதரித்து உள்ளனர். இதற்கு மேல் பாஜகவுக்கு ஆதரவு கூடுவது கடினம். திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் ஆதரவாளர்களை கவர்வது அத்தனை சுலபம் இல்லை.அதனால் பாஜகவின் மக்கள் ஆதரவு இந்த பத்து பன்னிரண்டு சதவீதத்தை கடந்து முன்னேறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான்.


Sivasankaran Kannan
ஜூன் 07, 2024 11:22

முடியல.. எவ்வளவு காலம் இந்த அரை வேக்காட்டு திராவிட குப்பைகளை சகிப்பது..


Bala
ஜூன் 05, 2024 20:46

நம் தமிழக MP க்கள் 39 பேரும் உங்களை வெற்றிபெறச்செய்தவர்களுக்கு காட்டும் நன்றி என்னவென்றால், வீணே நேரத்தையும் தொகுதி மேம்பாட்டு நிதியையும், உழைப்பையும் வீணாக்காமல் அனைத்தையும் உங்கள் தொகுதி மக்களுக்காக இனிமேலாவது செலவிடவேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்களின் பெரும்கோபத்திற்கு ஆளாக நேரிடும், 2026 சட்டசபை தேர்தலில் உங்கள் கட்சியும் கூட்டணி கட்சிகளும் மண்ணைக்கவ்வ நேரிடும். தமிழக மக்களே, ஒவ்வொரு MP க்களிடம் இருந்தும் அவர்களின் செயல்பாட்டினை, அவர்களின் வாக்குறுதிகளை அவ்வப்பொழுது அறிக்கையாகவும், ஆதாரங்களுடன் வெளியிட கோரிக்கை வையுங்கள். அதை செயல்படுத்தாத பட்சத்தில், அடுத்த தேர்தலில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்


Bala
ஜூன் 05, 2024 20:33

திரு அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராக ஒரு பெரிய கூட்டணியின் தலைவராக 2026 இல் வருவதை திராவிட கட்சிகளால் தடுக்க முடியாது. இது காலத்தின் கட்டாயம். பெருகிவரும் தமிழக மக்களின் செல்வாக்கை பெற்ற தலைவராக திரு அண்ணாமலை அவர்கள் திகழ்கின்றார்


Dharmavaan
ஜூன் 05, 2024 20:13

இப்போது ஹனிப்பட்டவரின் பாதிப்பு தெரிந்தது சிறுபான்மை இதை நம்பவில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை