உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்": ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் பேட்டி

"இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்": ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: 'ஐந்தாவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும்' என ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நடந்த பா.ஜ., நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:சில பேருக்கு சில ஆசைகள். சில பேருக்கு நாட்டின் நலன் மீது மட்டுமே ஆசை. எது வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்களோ அது வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு உழைக்கும் பிரதமராக மோடி உள்ளார். அதனால் தான் மூன்றாவது முறையாக, மக்கள் அவரிடம் நம்பிக்கை வைத்து ஆட்சியை அளித்து உள்ளனர். ஐந்தாவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sundar
ஜூன் 13, 2024 22:14

ஐயா, அப்படியே பெர்‌ கேப்பிட்டா வருமானத்தையும் சொல்லிடீங்கன்னா மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்வார்கள்.


Venkat
ஜூன் 12, 2024 23:35

ஏற்கெனவே இந்தியா ருபாய் அதலபாதாளத்துல இருக்கு.... இதுல 3 வது இடம் பிடிக்கப் போறானுங்கலாமா?


Venkat
ஜூன் 12, 2024 23:33

எப்போ? 2100 லையா? படிச்சவனும் திறமைசாலியும் லட்சக்கணக்குல இந்தியாவை விட்டு மேலைநாடுகளுக்கு போயிட்டு இருக்காங்க கடைசில இங்க இருக்குற ரவுடிகளையும், சங்கிகளையும் வச்சு என்ன கப்பல் வியாபாரமா பண்றது? எல்லாம் மோடி அவதாரத்தின் திருவிளையாடல்காலே...


ES
ஜூன் 12, 2024 22:12

People have no work nothing to eat. Yeah lets celebrate stock market raised absolutely pathetic comment


Ms Mahadevan Mahadevan
ஜூன் 12, 2024 19:47

பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த பிஜேபி இப்படி தான் சொல்லும் தண்ணீ கஷ்டம் சாமணியனுக்குதான். தெரியும் உங்களை போன்ற அரசியல் சுக வாசிகளுக்கு தெரியாது


Ms Mahadevan Mahadevan
ஜூன் 12, 2024 19:43

இப்படி சொல்லியே ஊற எமாதுங்க தலை நகர் முதல் கோவில்பட்டி வரை குடிக்க தண்ணி இல்ல நீங்க வெற கடுப்பு அடிக்காதீர்கள் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் பிஜேபி காரர்களே.


Priyan Vadanad
ஜூன் 12, 2024 19:08

பொருளாதார நிபுணர் சொல்லிட்டார்பா


Priyan Vadanad
ஜூன் 12, 2024 19:07

பங்கு சந்தையை உயர்த்தி விட்டமாதிரியா?


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 19:34

ஆமாம். மன்மோகன் விலகிய போது 21000–மாக இருந்த சந்தை இப்போ மூன்றரை மடங்குக்கு மேல் அதிகம். அதாவது 76600. போதுமா?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ