உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது: சீமான்

நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு?'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: பாடலா, இசையா எனக்கேட்டால் இரண்டும் முக்கியம் தான். மொழி உடல்; இசை உயிர். இரண்டையும் பிரிக்கக்கூடாது. இளையராஜா உரிமையைதான் கேட்கிறார்; மற்றவர்களுக்கு உரிமையை தரக் கூடாது என கூறவில்லை. இளையராஜா, வைரமுத்து பிரச்னை தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைதான். படத்தை ஒருமுறை வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் உரிமத்தை வைத்துக்கொள்வது சரியல்ல. நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. அதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? இந்தியாவில் நிறுவனங்கள் இல்லையா? ஏன் அமெரிக்க நிறுவனம் தேர்வு நடத்த வேண்டும்? வட இந்தியாவில் நீட் தேர்வெழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தியை அகற்றச்சொல்வதில்லை. தமிழகத்தில்தான் நீட் தேர்வெழுத வரும் மாணவர்களின் காதணி போன்றவற்றை அகற்றச்சொல்கின்றனர். சின்ன மூக்குத்தியில் கூட 'பிட்' அடிப்பார்கள் என சொல்லி கழற்ற சொல்கிறார்கள்; ஆனால் அவ்வளவு பெரிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர்களே சொல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

தத்வமசி
மே 10, 2024 15:34

அண்ணன் சீமான் அவர்கள் திரைப்படங்கள் பல எடுத்து நிறைய சம்பாதித்து, அதை நல்ல வழியில் சிலவழித்து தமிழக மக்களை நல்வழிப் படுத்தி அவர்களின் நல்ல முன்னேற்றத்திற்கு பாடு படுவதற்காகவே சீமான் அண்ணன் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார் இவர் தமிழகத்தில் அறிவுசார் பொக்கிஷம் மிகச் சிறந்த சிந்தனையாளர் இவர் சொல்வது எல்லாமே அதாவது ஆமைக்குஞ்சு முதல் கராத்தே, நீட் தேர்வு பற்றியெல்லாம் உலகில் மிகச்சிறந்த அறிவாளிகளாலும் சிந்திக்க இயலாது அவர் சொல்வதை அப்படியே உலகம் நம்பனும் அப்படி நம்பவில்லை என்றால் நீங்கள் தமிழன் கிடையாது, சங்கி


thanjai NRS krish
மே 10, 2024 06:55

போலி முகமூடி அணிந்து பேசுவது எல்லாம் பொய்யாக இருக்கும் பொழுது இவருக்கு எல்லாமே பொய்யாகத்தான் தெரியும்


Krishnamurthy G
மே 09, 2024 11:00

உனக்கு என்னப்பா நீ என்ன வேணுமுன்னாலும் பேசலாம்


Venkataraman
மே 09, 2024 03:26

இவர் கண்டுபிடித்து சொல்லி விட்டார் இனிமேல் இவரை கேட்டுதான் தேர்வு நடத்தலாமா கூடாதா என்று அரசு முடிவு செய்ய வேண்டும் இதேபோல பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கூட தேர்வில் தோல்வியடைகிறார்கள் அதனால் அந்த தேர்வையும் ரத்து செய்து விடலாம்


rama adhavan
மே 09, 2024 03:22

உளறுகிறார் முற்றி விட்டது வெளி நாடு சென்று மருத்துவம் படிக்கலாமா? பதில் சொல்வாரா?


K.Muthuraj
மே 08, 2024 18:34

கடந்த சில ஆண்டுகளாக தானே நீட் மூலம் சேர்க்கை அந்த மருத்துவர்கள் இப்பொழுதுதானே படிப்பு மற்றும் பயிற்சியில் இருப்பார்கள் அதற்குள் அவர்களின் தரம் எப்படி இவருக்கு தெரிய வரும்


vadivelu
மே 09, 2024 14:17

மருத்துவ கல்லூரிகளில் அமெரிக்கர்களை அமர்த்தியா கல்வி நடத்துகிறார்கள்? என்ன சொல்கிறார், மாணவர்கள் படிக்கும் முறை அமெரிக்க முறையில் என்கிறாரா? நான்கு வருடங்கள் படித்து முடித்தவர்கள் தரமற்ற முறையில் இருப்பார் என்று எப்படி சொல்கிறார்?


A1Suresh
மே 08, 2024 17:55

மருத்துவகல்லூரியில் என்னென்ன பாடங்கள் படிக்கின்றனர் என்று இந்த அதிமேதாவி சொல்லட்டுமே ? ஓரிரண்டாவது உத்தேசமாக சொல்லட்டும் பார்ப்போம்


Sivasankaran Kannan
மே 08, 2024 14:00

தமிழ்நாட்டை விட்டு கேரளா பக்கம் விரட்ட வேண்டும்


Narayanan
மே 08, 2024 10:28

தனியார் கல்வி நிலையங்கள் யாரை கொண்டாவது இந்த நீட் தேர்வை ஒழிக்கமுடியாதா, கொள்ளை பணம் சம்பாதிக்க முடியாதா என்று தேடிக்கொண்டு இருக்கும் வேளையில் சீமான் புகுந்து பணம் பண்ணுகிறார் இப்படி சொல்லி இவரும் தன்னை ஒரு பெரிய மனிதனாக கருதிக்கொண்டு, இவர் சொன்னால் நடந்துவிடும் என்று கூவிப்பார்க்கிறார் வாங்கின காசுக்கு அரசியலுக்கு வருவதே பணம் பண்ணத்தான் இவரும் அப்படித்தான் கல்விமுறையை அசிங்க படுத்துகிறார்


ராமகிருஷ்ணன்
மே 08, 2024 06:45

முதலில் யார் தமிழன் என்பதை நிர்ணயிக்கும் தகுதியை இவராக எடுத்து கொண்டார். இப்போது நீட் தேர்வு பற்றி பேசுகிறார். உண்மையில் எருமை மாடு மேய்க்க கூட தகுதியற்ற கூமுட்டை கண்டதை பிதற்றி திரியுது. இவனையும் நம்பும் முட்டா தமிழர் தான் திருந்தனும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ