உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "எங்க ஊருக்காரங்க வெற்றி பெறணும்": கமலா ஹாரிஸ்-க்கு போஸ்டர் வைத்து கொண்டாடும் மக்கள்

"எங்க ஊருக்காரங்க வெற்றி பெறணும்": கமலா ஹாரிஸ்-க்கு போஸ்டர் வைத்து கொண்டாடும் மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான திருவாரூரின் துளசேந்தரபுர மக்கள் பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.அமெரிக்காவில் வரும் நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக, அதிபர் பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்க உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0yl3ni5e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆப்ரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவில் பிறந்த அவர், வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2016ல் செனட் சபையின் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ல் அதிபர் தேர்தலின் போது, ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை அறிவித்தார். கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்-க்கு, அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். தற்போது இந்த பேனர்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கமலா ஹாரிஸ் அதிபரானால், அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் அதிபர் என்ற பெயர் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

அப்புசாமி
ஜூலை 25, 2024 13:39

போஸ்டரைக் கொண்டுபோய் அமெரிக்காவில்.ஒட்டணும்டா. நமது பண்பாட்டை அங்கே பரப்பணும். ஓட்டுக்கு 200 டாலர் கேக்கணும்.


ச. ரகுநாதன். அபுதாபி. UAE
ஜூலை 25, 2024 08:06

கமலா ஹாரிஸ் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர்.. அவர் 4 வருடம் அமெரிக்க துணை அதிபர் பதவி வகித்தபோது எத்தனை முறை பாரதம் வந்தார்? இந்தியர்கள் பற்றி அவருக்கு ஒரு கவலையும் இல்லை.. அதிலும் தமிழகம் பற்றி ஒரு தொடர்பும் அறவே கிடையாது.. இந்த லட்சணத்தில் சென்ற முறை பதவி ஏற்றபோது அவர் உறவினர் ஒருவராவது தமிழகத்திகிருந்து அமெரிக்கா அழைக்கபட்டாரா? கமலா அவர் தந்தை பூர்வீகமான ஜமைக்காவுக்கு அதிக உதவிகள் செய்வதாய் செய்திகள் வருகிறது… போங்கடா போய் ஆகவேண்டிய வேலய பாருங்க..


ஈஸ்வரன்
ஜூலை 25, 2024 07:27

இந்த. கமலா ஹாரிஷ் நம் இந்தியப் பண்பாட்டை அறவே கைவிட்டவர். இவரையெல்லாம் இந்தியர் அதிலும் தமிழர் என்பதே தவறு. இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ரிஷி ஸுனக் தனது ஒவ்வொரு செயலிலும் தான் ஒரு பாரத பண்பாட்டு வாசி என்று நடந்தவர். போற்றுதலுக்குறியவர்.


Gopalan Singapore
ஜூலை 25, 2024 02:22

துளசேந்திரபுரத்தில் உள்ள தனத குலதெய்வம் கோவிலுக்கு நன்கொடை அளித்தவர் கமலா ஹாரிஸ். அவரின் பெயர் நன்கொடையாளர்களின் பட்டியலில் இடம பெற்றிருக்கும்.


தமிழ்வேள்
ஜூலை 25, 2024 13:27

முடியலைடா சாமி ..


Venkat
ஜூலை 25, 2024 00:33

Have you guys ever celebrated your வம்சாவளி


Venkat
ஜூலை 25, 2024 00:31

Ignorant Idiots


rama adhavan
ஜூலை 24, 2024 22:46

ஒங்கோல் வம்சவாளியை கொண்டாடும் நாம், அதுபோல் இதையும் கொண்டாடட்டும், இதில் ஒன்றும் தப்பில்லை.


r ravichandran
ஜூலை 24, 2024 22:34

மக்கள் எந்த அளவுக்கு அறியாமையிலுள்ளனர் என்று நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது. அவர் முன்னோர்கள் இங்கு பிறந்து இருக்கலாம், அவருக்கும் இந்தியாவிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அவர் அமெரிக்கா அதிபர் ஆனால் தமிழ் நாட்டிற்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.


K.Ayyappan
ஜூலை 24, 2024 21:59

ஐயோ பாவம், இந்த ஊர் மக்கள். அந்த ஹாரிஸ் அம்மாவுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அம்மா அதன் முன் அவர்கள் அம்மா அந்த நாட்டின் வந்தேறி. அந்த நாட்டின் சட்டங்களை மீறி இந்த அம்மாவால் எதுவும் செய்ய முடியாது அந்த அம்மா முற்றிலும் அமெரிக்கன்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 24, 2024 21:47

willie brown க்கும் சேர்த்து போஸ்டர் வைங்க .....


மேலும் செய்திகள்





புதிய வீடியோ