இலங்கைக்கு கடத்த இருந்த 3.80 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
ராமநாதபுரம்: இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இருந்த 3.80 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை முஸ்லிம் தெரு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நள்ளிரவு அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, 19 பண்டல்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் சிகரெட் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் வெளிநாட்டு சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 'பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மதிப்பு 6.27 கோடி (இலங்கை மதிப்பு) எனவும், இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் இருக்கும்' எனவும் போலீசார் தெரிவித்தனர்.