உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் 4 ஆட்டோ, 47 பைக் பறிமுதல்; திருடி பதுக்கி வைத்தது அம்பலம்!

கோவையில் 4 ஆட்டோ, 47 பைக் பறிமுதல்; திருடி பதுக்கி வைத்தது அம்பலம்!

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அறிவொளி நகரில், இன்று அதிகாலை முதல் போலீஸ் படையினர் 75 பேர் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது வாகனங்களை திருடி பதுக்கி வைத்தது அம்பலம் ஆனது.கோவையில் கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் திருடி வாகனங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, இன்று அதிகாலை முதல் போலீஸ் படையினர் 75 பேர் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது வாகனங்களை திருடி பதுக்கி வைத்து இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சோதனையில் உரிய ஆவணங்களின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆட்டோக்கள் மற்றும் 47 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை கண்டறியும் வகையில், சோதனை நடத்தப்பட்டு உள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2025 05:10

மார்க்கத்தின் மேல அடக்கு முறை செய்தால் ஆஸ்திரேலியா வில் உள்ள டுபாக்கூர் பொய் ஆட்களுக்கு கோபம் வருவது தானே உலக வழக்கம்


m.arunachalam
ஏப் 13, 2025 15:48

நன்று . தொடர்ந்து செய்யுங்கள் .


Ramesh Sargam
ஏப் 13, 2025 15:17

அந்த அளவுக்கு திருட்டு நடக்கிறதென்றால், அங்கே காவல்துறை சரியில்லை என்றுதானே அர்த்தம்?


மாரன்
ஏப் 13, 2025 14:26

அறிவெளி நகரா ? ம்ம் ...... சரி


சமீபத்திய செய்தி