உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் இருந்து கர்நாடகா நோக்கி 7 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள பாலத்தின் இடதுபுற தடுப்பில் பயங்கரமாக மோதியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f2q5sa27&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Amar Akbar Antony
ஜூன் 08, 2025 08:48

முன்னாள் மறைந்த தி மு க தலைவர் கோவையில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது சாலையின் குழி மேடு ஏன் வேகத்தடுப்புக்களும் அகற்றி சமன் செய்தார்கள். மாநிலத்தின் குறிப்பாக நகர்புறத்தில் உள்ள சாலைகளை எடுத்துக்கொண்டால் எட்டு போட்டுக்கொண்டே வாகனத்தை ஓட்டவேண்டியிருக்குறது. சென்னையில் எங்கும் இந்த நிலைதான். அப்பாவித்தனமாக உளறக்கூடாது. மன்னர் குடும்பங்களின் அங்கங்கள் யாரேனும் இப்பகுதிக்கு வந்தால் சாலை மேம்படும்.


m.arunachalam
ஜூன் 07, 2025 21:09

Carelessness is a way of life nowadays. Where is the need for speed?. Ponder.


வாகனகுமார்
ஜூன் 07, 2025 19:53

கண்டவனெல்லாம் இங்கே கார் தயாரிச்சு தூள் கெளப்புறானுங்க


அப்பாவி
ஜூன் 07, 2025 19:51

என்னத்த சொல்ல? இவிங்க கட்டுற சாலையில் கண்டவனும் கார் ஓட்டி கதிசக்தி குடும்பம் குடும்பமா தூக்குது ஹைன்.


N Sasikumar Yadhav
ஜூன் 07, 2025 21:24

உங்கள மாதிரியான ஆட்கள் பொறுப்பில்லாமல் போக்கிரித்தனமாக கார்களை ஓட்டுகிறார்கள் . இதற்கு கதி சக்தி என்ன செய்யும் கோபாலபுர கொத்தடிமையார் அவர்களே


முக்கிய வீடியோ