உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலில் மூழ்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள்: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

கடலில் மூழ்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள்: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் நாகர்கோவில் உள்ள திருமண வீட்டிற்கு நேற்று (மே 5) வந்தனர். அதில் 12 பேர் இன்று காலை கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து ராஜாக்கமங்கலம் லெமூர் பீச்சுக்கு காலை 9:30 மணியளவில் வந்தனர். இதில் சிலர் கடலில் கால் நனைத்தபடி கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று வந்த ராட்சத அலை 6 பேரை இழுத்தது. இதில் ஒரு மாணவி உயிர் தப்பிய நிலையில் மூன்று மாணவிகள் இரண்டு மாணவர்கள் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Saai Sundharamurthy AVK
மே 06, 2024 16:14

என்ன தான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும். உதாரணம் : 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி.


Ram pollachi
மே 06, 2024 16:08

நீரிலும் நெருப்பிலும் விளையாட கூடாது... இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


nsathasivan
மே 06, 2024 14:48

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கடல் அலை ஆபத்தை விளைவிக்கும் என்று ஏன் தெரியவில்லைஅவர்கள் கடலின் சிறிது உள்ளே சென்றிருக்கக்கூடும்


RaajaRaja Cholan
மே 06, 2024 14:36

பரிதாபம், ஆழ்ந்த இரங்கல்கள், கடலின் ஆபத்தை பலர் உணர்வதில்லை, கடலில், கடல் அருகில் வாழ்பவர்களுக்கு கடல் ஒரு சிறு குழந்தை எப்படி சமாளிப்பது என்று தெரியும் ,


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை