உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐகோர்ட்டிற்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை ஐகோர்ட்டிற்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த ராமசாமி, தனபால், சின்னசாமி மற்றும் கந்தசாமி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் இந்த நான்கு பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். தற்போது சென்னை ஐகோர்ட்டில் 65 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venkatachalam N
மார் 11, 2025 07:50

வலதுக்கும் இடதுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிவிங்கள் நண்பரே வலதுசாரி மிகவும் ஆபத்தானது


R.Varadarajan
மார் 05, 2025 01:35

இடது சார்புள்ளவர்களாக இல்லாதவரை நலம்


Ray
மார் 04, 2025 22:09

ஏஞ்சாமி மூணு சாமியா? வக்கீல்கள் போராட்டத்துக்கு செவி சாய்க்கப் பட்டுள்ளது. இன்னும் கொஞ்சம் சத்தமா கூவினால் பலன்கள் தொடரலாம். இறங்கி அடிச்சாதானே இறங்கி வரானுங்க. அடுத்து உச்ச நீதிமன்றத்துக்கும் சில சாமிகள் நியமிக்கப் படலாம்போல.


புதிய வீடியோ