உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் 4 பேர் படுகாயம்

பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் 4 பேர் படுகாயம்

திருவாரூர்:திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி கூரை பெயர்ந்து விழுந்ததில், மாணவர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதி மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில், ஒரு வகுப்பறையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையும், மற்றொரு வகுப்பறையில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளும் இயங்கின.நேற்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் படித்து வந்த வகுப்பறை கட்டட கூரையில் இருந்து காரைகள் பெயர்ந்து விழுந்தன. அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர், நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் என, நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.நான்கு மாணவர்களும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sambath
ஏப் 09, 2025 14:49

52000 கோடி ரூபாய்.... பள்ளிக் கல்வித்துறையின் ஒரு வருட செலவு....


சுராகோ
ஏப் 09, 2025 10:16

இதற்காக இந்த தமிழக அரசு வெட்கப்படவேண்டாமா? பள்ளிக்கூடத்தை இப்படி சீரழித்துவிட்டு இப்பொழுது இவர் பல்கலைக்கழகங்களை சீரழிக்க வேந்தர் பதவி வேறு.


VENKATASUBRAMANIAN
ஏப் 09, 2025 07:43

ஃஒரு பள்ளியை கூட ஒழுங்காக நிர்வாகம் செய்ய தெரியாத அரசு. அமைச்சர்களுக்கு எம்எல்ஏக்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் மக்கள் வரிப்பணத்தில். ஆனால் பள்ளி யை சீர் செய்ய நிதி இல்லை. கேவலமாக இருக்கிறது. இவர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.


Oru Indiyan
ஏப் 09, 2025 07:03

இதற்கு என்ன சப்பைக்கட்டு காட்டுவார் அகில உலக இன்பநிதி ரசிகர் மன்ற தலைவர்.


Venkateswaran Rajaram
ஏப் 09, 2025 06:36

லஞ்சம் பெற்றுக் கொண்டு தரம் இல்லாமல் கட்ட அனுமதி தந்த அனைத்து அரசு பொறியாளர்களையும் டெண்டர் எடுத்து வேலை செய்த காண்ட்ராக்டரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.. ஏன் எந்த ஊடகங்களும் இதை பெரிதாக காட்டுவதில்லை பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக துதி பாடுவதை கொள்கையாகக் கொண்டு சம்பாதித்து வருகிறார்கள்..... மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும் தரம் இல்லாமல் கட்டுவதை அவர்கள் அனுமதிக்க கூடாது இப்படி தரம் இல்லாமல் கட்டினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அவனை கட்டி வைத்து துவைக்க வேண்டும்.....கொள்ளையடிப்பதற்கு என்று அரசியலுக்கு வருபவர்களால் தரத்தை நாம் எதிர்பார்க்க முடியாது நாம்தான் மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும் இவர்களை எப்படி திருத்த வேண்டும் என்று..... சட்டத்தை கொண்டு இவர்களை ஒன்றும் செய்ய முடியாது... என்ன கொள்ளையடித்தாலும் கொலை செய்தாலும் இவர்கள் சாகும் வரை இவர்களுக்கு தீர்ப்பு என்பதே வராது... தீர்ப்பு வருவதற்குள் வழக்கு தொடர்ந்தவர்களை இவர்கள் கொன்று விடுவார்கள்.... தீர்ப்பு இவர்களுக்கு சாதகமாக இல்லை எனில் மீண்டும் ஜாமீன் பெற்று இவர்கள் எப்பொழுதும் போல் இவர்கள் தொழிலை செய்து கொண்டிருப்பார்கள் எடுத்துக்காட்டுக்கு கனிம வளம் கொள்ளையர்களின் வழக்கின் நிலை.. அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாகி விட்டார்கள்.. இவர்கள் விடுதலையும் பெற்று அதற்கு மான நஷ்ட ஈடு வழக்கு என்று ஒன்று தொடர்ந்து அதிலும் பணம் பெற்று விடுவார்கள்...


Mani . V
ஏப் 09, 2025 05:38

அதற்குத்தான் நாங்கள், "படிக்கப் போகாதே. குடிக்கப் போ" என்று சொல்கிறோம்.


முக்கிய வீடியோ