உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடற்படையில் சேர 456 பேருக்கு பயிற்சி

கடற்படையில் சேர 456 பேருக்கு பயிற்சி

சென்னை: கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர விருப்பம் உள்ள, மீனவ இளைஞர்கள் 456 பேருக்கு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பயிற்சி அளித்துள்ளனர். தமிழக மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு, தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இலவசமாக தங்கும் இடம், உணவு அளித்து, 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி, பயிற்சி அளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டில், 108 பேர் என, மூன்று ஆண்டுகளில், 456 பேருக்கு பயிற்சி அளித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ