உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு இடைத்தேர்தலில் 46 பேர் போட்டி; கடைசி நேரத்தில் வெளி மாநில பெண் பெயர் நீக்கம்

ஈரோடு இடைத்தேர்தலில் 46 பேர் போட்டி; கடைசி நேரத்தில் வெளி மாநில பெண் பெயர் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 பேர் போட்டியில் உள்ளனர். கடைசி நேரத்தில், வேட்பாளர் பட்டியலில் இருந்த வெளிமாநில பெண் பெயர் நீக்கப்பட்டது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிசம்பர் 14ல் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த, ஜனவரி 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க, த.வெ.க., கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதனால் தி.மு.க., சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சுயேட்சைகளும் சேர்த்து மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு நேற்று (ஜன.20) பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்தல் களத்தில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 47 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலில் இருந்த, பெங்களூருவைச் சேர்ந்த பத்மாவதி பெயர் நீக்கம் செய்யப்பட்டது. வெளிமாநில பெண் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் நாள் முடிவடைந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. பின்னர், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் இறுதி வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆகக் குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vijay
ஜன 21, 2025 17:06

ஆனா, இந்த திராவிட கட்சிகள் கர்நாடகம் போன்ற அண்டை மாநிலத்தில் தங்கள் கிளைகள் வைச்சிருக்காங்க. போட்டியிடுவது என்னவோ கர்நாடகவாழ் தமிழர்கள்தான். ஹிந்தி எதிர்ப்பு கூட்டம் தேர்தலைப்போ சென்னை சவுகார்பேட்டை போன்ற இடங்களில் ஹிந்தியில் போஸ்டர் ஒட்டியும், ஹிந்தியில் பேசியும் வோட்டு கேட்கிறாய்ங்க. இந்தியகுடிமக்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும், இடத்திலும் தேர்தலில் போட்டியிடலாம், அந்த இடங்களில் அவர்களுக்கு குடியிருக்கும் சான்று, வோட்டுரிமை மற்றும் அடையாள அட்டை போன்ற விதிமுறைகளை பின்பற்றினாலே போதும், லட்சத்தீவு, அஸ்ஸாம் மற்றும் சிக்கிமில் உள்ள சில தன்னாட்சி அந்தஸ்துள்ள மாவட்டங்கள் தவிர இந்தியாவில் எங்கும் போட்டியிடலாம். வேட்பாளருக்கு வோட்டு போடுவதா வேண்டாமா என்பது வோட்டு போடும் மக்களின் உரிமை. நீக்கப்பட்ட வேட்பாளர் விதிகளில் பொருந்தினால், விரும்பினால் வழக்கு தொடுக்கலாம். சுயேட்சைகளுக்கு மட்டுமில்லை, மக்களுக்கே விதிகளின்படி அதை எதிர்க்க உரிமை இல்லை, அதிகாரம் இல்லை. நான் சொன்னதில் மாற்றம், குற்றம் இருந்தால் தக்க ஆதாரங்களோடு பதில் கொடுக்கலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 21, 2025 13:41

தமிழக தேர்தல் ஆணையம் திமுக தேர்தல் ஆணையம் என்று நிரூபித்து விட்டது


Sankare Eswar
ஜன 21, 2025 12:47

இந்த இடைத்தேர்தல் தேவையற்றது. மக்கள் வரிப்பணம் வீணாக்கப் படுகிறது. இந்த தேர்தலை தடுக்க நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கலாம்.


Shankar
ஜன 21, 2025 11:23

வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுள்ளவர்களே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்போது சட்டமன்ற தேர்தலில் அதுவும் நம்நாட்டில் உள்ள அடுத்த மாநில வேட்பாளரை நீக்குவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? அதுவும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால்... நகைப்புக்குரிய விஷயம் இது.


KRISHNAN R
ஜன 21, 2025 10:44

இதற்கே தடை வாங்கலாம்


karupanasamy
ஜன 21, 2025 09:55

விடியலுக்கு ஆலோசனை வழங்கும் அடிமைகளின் தில்லு முள்ளு வேலையாக இருக்கலாம். ஏதேனும் ஒரு அடிமை நீதிமன்றத்தில் இதை காரணமாக வைத்து தேர்தலுக்கு இடைக்கால தடை வாங்கலாம். தேர்தல் செலவு மிச்சம்.


Ray
ஜன 21, 2025 08:56

அவரது வேட்புமனுவை ஏற்ற தேர்தல் அதிகாரி அந்த பதவியில் தொடரக் கூடாது


Shekar
ஜன 21, 2025 09:42

அண்ணன் படிச்சது சமசீர் கல்வியா?, ஒங்க இளவரசர் அண்ணன் ராகுல் காந்தி வயநாட்டுக்காரரா? கேரள சேட்டனா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 21, 2025 10:30

குஜராத் மோடி பகவான் உ பி யில் போட்டியிட்டது சரிங்களா கோப்பால் ?


Ray
ஜன 21, 2025 12:53

அவர் போட்டியிடுவதை மற்ற வேட்பாளர்கள் தடுத்தது எந்த அடிப்படையில்? அந்த கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்று மனுவை நிராகரித்தது ஏன்? பிரச்சினைக்குரிய வேட்ப்பாளர் வெளியேறியது WITHOUT PROTEST ஏன்?


Barakat Ali
ஜன 21, 2025 17:45

வந்தேறி ஈவேரா எப்படி தமிழர் தலைவனானார் ????


shyamnats
ஜன 21, 2025 08:13

வயநாடு தொகுதியில் இந்த விதிகள் செல்லாதா? இந்தியாவில் யாரும், எங்கும் போட்டி போடலாம் என்ற விதியை இவர்கள் எந்த அடிப்படையில் மீறுகிறார்கள்? சக போட்டியாளர் எதிர்த்ததற்காக எல்லாம் நீக்க முடியாது. கொடுத்த தகவல் தவறாக இருந்தால் மட்டுமே நீக்க வேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 21, 2025 17:26

வாரணசி தொகுதியில் மோடிக்கு இந்த விதிகள் செல்லாது என்று போட்டியிட அனுமதித்தார்களே அதே மாதிரி தான் வயநாடு தொகுதியில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை