உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்றிரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=selygtch&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல, இலங்கையின் நெடுந்தீவு மேற்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 17 பேரையும் நேற்றிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மொத்தம் 47 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sankar
அக் 09, 2025 15:38

இந்தியா கடலோர பாதுகாப்பு படை நம் எல்லையை தாண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும் .


Santhakumar Srinivasalu
அக் 09, 2025 12:58

நலிவடைந்த இலங்கை அரசு மீனவர் கைது மூலமாக கஜானாவை நிரப்புரகிற வேலைய செய்கிறது.


Kumar’s
அக் 09, 2025 12:19

Can Pakistan arrest 47 Gujarati fishermen similarly? Will Indian navy and union govt keep quite and watch?


Ramesh Sargam
அக் 09, 2025 09:21

இந்த தொடர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவுகான ஏழு போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அணுகலாமா? ஆனால் அவரிடம் ஒரு குறை. அவர் நாட்டில் தொடர்ந்து நடக்கும் அந்த துப்பாக்கி சூட்டு பிரச்சினைக்கே அவரால் ஒரு நிரந்தர முடிவு காணமுடியவில்லை. அவர் போய் இந்த தமிழக மீனவர்கள், மன்னிக்கவும், இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்க்கமுடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை