உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அதிக விண்ணப்பங்களை பெற்ற 5 அரசு கல்லூரிகள்; கணினி அறிவியல் பாடத்திற்கு கூடுது மவுசு!

தமிழகத்தில் அதிக விண்ணப்பங்களை பெற்ற 5 அரசு கல்லூரிகள்; கணினி அறிவியல் பாடத்திற்கு கூடுது மவுசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், நடப்பாண்டில் அதிகமானோர் இளநிலை கணினி அறிவியல் பட்ட வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை பிரசிடென்சி கல்லூரிக்கு மட்டும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து, மேற்படிப்பு படிக்க கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரப்பெற்ற டாப் 5 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் வருமாறு:1. பிரசிடென்சி கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 40,167 விண்ணப்பங்கள் வந்துள்ளன.2. கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,727 இடங்களுக்கு 33,753 விண்ணப்பங்கள் வந்துள்ளன.3. நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,430 இடங்களுக்கு 29,376 விண்ணப்பங்கள் வந்துள்ளன.4. அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,086 இடங்களுக்கு 29,275 விண்ணப்பங்கள் வந்துள்ளன.5. திருச்சி பெரியார் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,600 இடங்களுக்கு 24,396 விண்ணப்பங்கள் வந்துள்ளன.சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் உள்ள 2038 இடங்களுக்கு 23 ஆயிரத்து 18 மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த ஆண்டு பி.எஸ்.சி கணினி அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தன. அதைத் தொடர்ந்து பி.ஏ. தமிழ், பி.காம், பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி வேதியியல் மற்றும் பி.ஏ. பொருளாதாரம் பாடத்தில் கல்வி பயில அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.இந்த ஆண்டு 179 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,465 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கை இணையதளம் மூலம் இதுவரை 1,87,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பிரசிடென்சி கல்லூரி இந்த ஆண்டு பிஎஸ்சி வேதியியலுக்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை வந்துள்ளன. கடந்த ஆண்டு, அரசு கல்லூரி சேர்க்கைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. “அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது. ஜூன் 14ம் தேதி வரை தொடரும்” என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 16ம் தேதியும், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 30ம் தேதியும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Jai Sriram
ஜூன் 01, 2025 16:15

இருக்கை எண்ணிக்கையை விட சுமார் இருபது மடங்கு விண்ணப்பங்களை கல்லூரிகள் விற்றுள்ளன. விண்ணப்பம் 100 ₹ என்றாலும் 40000 துக்கு சுளையாக 40 லட்சம் ஈட்டியிருக்கும். இது தவிர சிபாரிசு, லஞ்சம் போன்றவை தனி.


தமிழ்வேள்
ஜூன் 01, 2025 12:27

வரிசை எண்கள் 3 4 & 5 ல் உள்ள கல்லூரிகள் ஒழுங்கீனம் ரவுடித்தனம் புள்ளீங்கோ அட்டகாசத்துக்கு பெயர் பெற்றவை.. அவற்றில் சேர் கூட்டம் முண்டியடித்து வருகிறது என்றால் அந்த மாணவர்களின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.


Pmnr Pmnr
ஜூன் 01, 2025 11:56

படிப்பு ஒன்று தான் நல்லது


Ramesh Sargam
ஜூன் 01, 2025 12:40

மிக மிக சரியாக கூறினீர்கள்.


R Dhasarathan
ஜூன் 01, 2025 11:18

கைவினைஞர்கள் அதிகம் தேவை தற்சமயம். ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.


Apposthalan samlin
ஜூன் 01, 2025 10:00

வட மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் எப்படியும் படிக்க வைக்க மாட்டார்கள் அவர்கள் விவசாயம் செய்வார்கள் .


rama adhavan
ஜூன் 01, 2025 09:57

தொழில் கல்வி ஒருவருக்கு இறுதி வரை வேலை வழங்கும். தொழிலும் தொடங்கலாம். கலை கல்லூரி படிப்பு கிளெர்க் வேலை, ஜூமெட்டோ, ஸ்விக்கி, ஜியோ,ஆமெஜான், பிளிப்கார்ட் முதலிய முக்கியத்துவம் இல்லாத பணிகளை தான் தரும். இதற்கு நாமே சாட்சி.


ஆரூர் ரங்
ஜூன் 01, 2025 09:27

செயற்கை நுண்ணறிவு காலத்தில் கணினி அறிவியல் படிப்பிற்கான வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. மேலும் மேலும் கலைக் கல்லூரிகளை உருவாக்குவது வீண். ITI கள் தான் அதிகமாக தேவை.


சதீஷ்
ஜூன் 01, 2025 10:40

கணினி அறிவியல் அடிப்படை படிக்காமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படி கற்றுக் கொள்ள முடியும்.


Nada Rajan
ஜூன் 01, 2025 09:26

அரசு கல்லூரி என்றாலே தமிழக அரசு தான் முதன்மையிடம்... மாநில அளவில் தமிழகத்திற்கு மவுசு என்று திமுக கூட்டம் பேச ஆரம்பித்து விடுமே...


Nada Rajan
ஜூன் 01, 2025 09:26

இதற்கு திமுக தான் காரணம் என்று திராவிட மாடல் காரர் மார்தட்டிக் கொள்வார்களே


சின்னசேலம் சிங்காரம்
ஜூன் 01, 2025 09:21

எல்லாரும் கம்ப்யூட்டர் படிச்சா அப்புறம் யார் தான் விவசாயம் செய்றது


B.Palanivel
ஜூன் 02, 2025 07:29

Please promote Agriculture and its allied matters which is perpetual for India.


சமீபத்திய செய்தி