மேலும் செய்திகள்
547 கிலோ குட்கா முடிச்சூரில் பறிமுதல்
25-Sep-2025
செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே போலீஸ் வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ஆதிலட்சுமிபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த சென்னை பதிவெண் கொண்ட காரில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மூடைகள் இருந்தன. இதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜால்பார் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திலால் 20, நத்தம் அருகே கோபால்பட்டி பாறைப்பட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது 40, சின்னாளபட்டியை சேர்ந்த தர்மராஜ் 43, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா மூடைகள், காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக ஆதிலட்சுமிபுரத்தில் கடை நடத்தும் வேலக்கவுண்டன்பட்டி சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
25-Sep-2025