உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு 5,000 சிறப்பு பஸ்

தீபாவளிக்கு 5,000 சிறப்பு பஸ்

சென்னை:தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவு பஸ்களில், 74,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வசதிக்காக, 5,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வரும், 31ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அரசு விரைவு பஸ்களில் செல்ல, www.tnstc.inமற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்களில், பொது மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும் 29, 30ம் தேதிகளில் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய, 74,882 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களின் வசதிக்காக, 5,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான, அறிவிப்பு, நாளை மறுநாள் வெளியிடப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை