உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 மாதங்களில் 527 பேர் மின்சாரம் பாய்ந்து மரணம்

10 மாதங்களில் 527 பேர் மின்சாரம் பாய்ந்து மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, மின் விபத்துக்களில் சிக்கி, 40 மின் ஊழியர்கள், 487 பொதுமக்கள் என, மொத்தம், 527 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தீர்வு காண, காலி பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு மின் வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக மின்வாரியம், சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில் மின்கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது.பணிச்சுமைமழை, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால், அந்த சாதனங்கள் சேதமடைகின்றன. அவற்றை முறையாக சீரமைப்பதில்லை. மின் சாதனங்களில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், அவற்றை, மின் ஊழியர்கள் தவிர்த்து, வேறு நபர்கள் தொட அனுமதி கிடையாது.ஆனால், அரசியல் கட்சிகளும், விளம்பர நிறுவனங்களும் மின் சாதனங்களில் போஸ்டர் ஒட்டுகின்றனர்; மின்கம்பிகள் மேல் பேனர்களை கட்டுகின்றனர்.இதுபோன்ற காரணங்களால், நடப்பு நிதியாணடில் கடந்த ஏப்., முதல் டிசம்பர் மாதம் வரை, மின் விபத்துகளில் சிக்கி, 40 மின் ஊழியர்கள்; 487 பொதுமக்கள் என, மொத்தம், 527 பேர் உயிரிழந்து உள்ளனர். 124 மின் ஊழியர்களும்; 160 பொதுமக்களும் காயம் அடைந்துள்ளனர். இதுதவிர, 341 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன.இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில், 'மின் வாரியத்தில், 55,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.ஒப்புதல்இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் சாதனங்களுக்கு அருகில் செல்லக்கூடாது என்று, பலமுறை மக்களை அறிவுறுத்தியும், சிலர் அலட்சியம் காட்டுகின்றனர். குறிப்பாக, கட்டடம் கட்டுவது உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர், மின்கம்பி உள்ளிட்ட சாதனங்களை இஷ்டத்திற்கு கையாளுகின்றனர்.அதனுடன், கொடி கம்பம், பேனர் கட்டுவதற்கும் மின் சாதனங்களை பயன்படுத்துவதால், பலர் மின் விபத்தில் சிக்குகின்றனர்.மின் சாதனங்களில் பழுது ஏற்படும் போது, மின் வினியோகத்தை துண்டித்து ஊழியர்கள் சரி செய்ய வேண்டும். சிலர், அதை பின்பற்றுவதில்லை.எனவே, ஊழியர்களின் பாதுகாப்பிற்காக தனி பாதுகாப்பு செயலி துவக்கப்பட்டுள்ளது.அதில் பழுதான சாதனத்தை சரிசெய்யும் விபரத்தை பதிவிட வேண்டும். மின் வினியோகத்தை நிறுத்தி, சரி செய்ய அதன் வாயிலாகவே, அதிகாரிகள் ஒப்புதல் தருவர்.மக்களிடமும் மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் மின்விபத்து தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

*

பாக்ஸ்---------எந்த மண்டலத்தில்அதிக மின்விபத்து --------------------மண்டலம் - உயிரிழப்பு - விபத்து - கால்நடைகள் - மொத்தம் -----------------------------------------------------------திருச்சி - 67 - 31 - 47 - 145 மதுரை - 71 - 35 - 22 - 128 காஞ்சிபுரம் - 38 - 19 - 69 - 126திருநெல்வேலி - 63 - 27 - 33 - 123 தஞ்சை - 49 - 31 - 32 - 112 வேலுார் - 53 - 23 - 35 - 111 கோவை - 48 - 28 - 26 - 102 சென்னை வடக்கு - 35 - 16 - 39 - 90 விழுப்புரம் - 32 - 20 - 19 - 71 திருவண்ணாமலை - 35 - 19 - 11 - 65 ஈரோடு - 26 - 27 - 6 - 59 கரூர் - 10 - 8 - 2 - 20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்