உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வாரிய தொழில்நுட்ப பிரிவில் 6 இயக்குநர் பதவி காலி

மின்வாரிய தொழில்நுட்ப பிரிவில் 6 இயக்குநர் பதவி காலி

சென்னை:தமிழக மின் வாரியத்தில் தொழில்நுட்ப பிரிவில், ஏழு இயக்குநர்கள் பதவியில், ஆறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசின் நிறுவனமான மின் வாரியத்தில், கடந்த மார்ச் முதல் மின் தொடரமைப்பு கழக இயக்குநர் பதவியும், ஏப்ரலில் இருந்து பசுமை எரிசக்தி கழக தொழில்நுட்ப இயக்குநர், மின் இயக்க இயக்குநர் பதவிகளும் காலியாக உள்ளன. மேலும், கடந்த மே முதல் மின் உற்பத்தி இயக்குநர் பதவியும், ஜூலை முதல் மின் பகிர்மான கழக இயக்குநர், மின் தொடரமைப்பு கழக இயக்குநர் பதவிகளும் காலியாக உள்ளன. மின் திட்ட இயக்குநராக உள்ள அதிகாரியும், இம்மாதம் ஓய்வுபெற உள்ளார். இதுகுறித்து, தமிழக எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பொதுச் செயலர் சேக்கிழார் கூறியதாவது: இயக்குநர்கள் ஓய்வுபெறும்போது, தலைமை பொறியாளர்களை உடனே புதியவர்களாக நியமித்தால், ஒவ்வொரு நிலையில் உள்ள பொறியாளருக்கும் உடனுக்குடன் பதவி உயர்வு கிடைக்கும் . அதை செய்யாமல், தலைமை பொறியாளராக இருப்பவர்களை, இயக்குநர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக நியமிப்பதால், ஒருவரால் இரு பணியில் முழு கவனத் துடன் பணிபுரிய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !