UPDATED : அக் 19, 2025 11:55 AM | ADDED : அக் 19, 2025 11:49 AM
சென்னை; சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர்.தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் புறநகர் பஸ் நிலையங்களில் இருந்து ஏராளமான பஸ்களில் அவர்கள் சென்று வருகின்றனர். அதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் 6,15,922 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கின்றனர்.அக்.16ம் தேதி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 2853 பஸ்களில் 1,28,275 பேரும், மறுநாளான அக்.17ம் தேதி இயக்கப்பட்ட 4926 பஸ்களில் 2,56,152 பயணிகளும் சென்றுள்ளனர். கடந்த 2 நாட்களை விட நேற்று மட்டும் மொத்தம் 4926 பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் 2,56,152 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணித்து இருக்கின்றனர்.ஒட்டு மொத்தமாக 3 நாட்களில் மட்டுமே 6,15,922 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். நாளைய தினம் (அக்.20) தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். எனவே இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.